Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

உயர்ரக அம்சங்களோடு ஆசஸ் ROG போன் 5 மார்ச் 10 அறிமுகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

 ஆசஸ் ஆர்ஓஜி போன் 5


ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 6.78 இன்ச் முழு எச்டி ப்ளஸ் ஓஎல்இடி டிஸ்ப்ளே, 20:9 விகித 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதத்துடன் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

ஆசஸ் ஆர்ஓஜி போன் 5

ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 வெளியீட்டு தேதி மார்ச் 10 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கேமிங் ஸ்மார்ட்போன் கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட ஆர்ஓஜி போன் 3-ன் வாரிசாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்த வெளியீட்டு நிகழ்வு மார்ச் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டாலும் இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட்

ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் வரும் எனவும் ஆண்ட்ராய்ட் 11 மூலம் இது இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் வசதியுடன் வரும் எனவும் கூறப்படுகிறது.

144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்போ

ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 பின்புறத்தில் ஆரா லைட்டிங் இடம்பெறும் எனவும் இது 6.78 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, ஓஎல்இடி, 144 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்போடு வரும் எனவும் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

ஆசஸ் ஆர்ஓஜி போன் 5 ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. மூன்று பின்புற கேமரா இதில் இருக்கும் எனவும் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 16 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 8 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக