வாட்ஸ்அப் நிறுவனம் தற்பொழுது புதிய வீடியோ அம்சத்தைச் சோதனை செய்து வருகிறது. இந்த புதிய வீடியோ அம்சம் பயனர்கள் ஷேர் செய்யும் வீடியோக்களை மியூட் (Mute) செய்ய அனுமதிக்கிறது. இந்த புதிய அம்சம் தற்பொழுது பீட்டா பயனர்களுக்குக் கிடைக்கிறது. வாட்ஸ்அப் அறிமுகம் செய்துள்ள இந்த அம்சத்தின் விபரங்களைப் பார்க்கலாம்.
புதிய மியூட் அம்சம்
வாட்ஸ்அப் மூலமாக ஒரு வீடியோவை உங்கள் தொடர்பில் உள்ள ஒரு நபருக்கு அனுப்புவதற்கு முன்பு, அந்த வீடியோவை நீங்கள் மியூட் செய்ய விரும்பினால் இந்த புதிய மியூட் அம்சம் உங்களுக்கு அனுமதி வழங்கும். இப்படி ஒரு அம்சத்தை வாட்ஸ்அப் சோதனை செய்வதாகக் கூறப்படுகிறது. மியூட் வீடியோக்கள் என வெறுமனே பெயரிடப்பட்ட இந்த அம்சம் வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு இப்போது வழங்கப்படுகிறது.
பீட்டா வெர்ஷன் 2.21.3.13
இந்த அம்சத்தைப் பயன்படுத்த நீங்கள் பீட்டாவின் 2.21.3.13 என்ற சமீபத்திய பதிப்பில் இருக்க வேண்டும். பயன்பாட்டின் பீட்டா பதிப்பிற்கு ஒரு அம்சத்தை வெளியிடுவது என்பது நிறுவனம் அதைச் சோதித்து வருகிறது என்பது தான் அர்த்தம். இந்த புதிய அம்சத்தில் எதுவும் பிழைகள் அல்லது சிக்கல்கள் உள்ளதா என்பதை அறிய வாட்ஸ்அப் பீட்டா பயனர்களிடமிருந்து கருத்துக்களை நிறுவனம் தற்பொழுது சேகரித்து வருகிறது.
WABetaInfo வெளியிட்டுள்ள புகைப்படம்
இந்த புதிய பீட்டா வெர்ஷனில் கிடைக்கும் மியூட் வீடியோ அம்சம் உண்மையில் வீடியோவை பகிர்வதற்கு முன்பு தொடர்புகளுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் கிளிப்களை மியூட் செய்ய அனுமதிக்கும். WABetaInfo வெளியிட்டுள்ள படத்தின்படி மியூட் வீடியோ விருப்பம் வீடியோ எடிட்டிங் திரையில் அமைந்துள்ளது. இது சீக் பார் கீழ் ஒரு வால்யூம் (Volume) ஐகான் வடிவத்தில் வருவதாகப் புகைப்படம் காட்டுகிறது. இதைத் தட்டினால் வெளிச்செல்லும் வீடியோவை மியூட் செய்யலாம்.
எப்போது அனைவருக்கும் கிடைக்கும்?
மீதமுள்ள விருப்பங்கள் வழக்கம் போல அதே இடத்தில் அமைந்துள்ளது. எமோட் விருப்பம், டெக்ஸ்ட் விருப்பம் மற்றும் எடிட் விருப்பத்துடன் ஒரே மாதிரியாக இருக்கிறது. இப்போது வரை, இந்த அம்சம் பயன்பாட்டின் நிலையான பதிப்பிற்கு எப்போது வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சோதனை முடிந்ததும் இந்த அம்சம் அனைவருக்கும் கிடைக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக