Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 8 பிப்ரவரி, 2021

Google Play Music பயனர்களுக்கு இது தான் இறுதி கெடு.. இல்லைனா டேட்டா எல்லாம் டெலீட்..

 Google Play Music பயனர்களின் கவனத்திற்கு

Google Play Music பயன்படுத்தும் பயனர்களுக்கு இது தான் இறுதி கெடு, உடனடியாக உங்களின் கூகிள் பிளே மியூசிக் கணக்கின் தகவல்கள், பாடல்கள், பிளேலிஸ்ட், பில்லிங் மற்றும் மற்ற டேட்டாகள் அனைத்தையும் காலம் தாமதிக்காமல் கூகிள் நிறுவனத்தின் யூடியூப் மியூசிக் தளத்திற்கு மாற்றிக்கொள்ளுங்கள். இல்லையென்றால், பிப்ரவரி 24ம் தேதிக்குப் பின்னர் உங்களின் Google Play Music தகவலை நீங்கள் மீட்டெடுக்க முடியாது.

Google Play Music பயனர்களின் கவனத்திற்கு

கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின்படி, Google Play Music பயன்பாட்டின் சேவை கடந்த டிசம்பர் மாதம் முதல் துண்டிக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் கூட, கூகிள் பிளே மியூசிக் பயனர்களின் தகவல்கள் மற்றும் அவர்களின் விருப்பமான டேட்டாக்களை இடமாற்றம் செய்துகொள்ள நிறுவனம் இப்போது பிப்ரவரி 24ம் தேதி வரை மட்டுமே அவகாசம் வழங்கியுள்ளது.

உங்கள் அக்கௌன்ட் டேட்டாவை மாற்றிக்கொள்ளலாம்

இந்த குறிப்பிட்ட இடைவெளி காலத்திற்குள் Google Play Music பயனர்கள் தங்களின் அக்கௌன்ட்டை music.google.com என்ற லிங்க் மூலம் உங்களின் ஆண்ட்ராய்டு அல்லது iOS சாதனம் வழியாக ஓபன் செய்து, கூகிள் பிளே மியூசிக் டேட்டாவை YouTube Music தளத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். நீங்கள் இந்த லிங்க்-ஐ கிளிக் செய்து, உங்கள் அக்கௌன்ட்டை ஓபன் செய்து, Transfer to YouTube என்ற விருப்பத்தை கிளிக் செய்து டேட்டாவை மாற்றிக்கொள்ளலாம்.

Transfer to YouTube விருப்பம் என்ன செய்யும்?

Transfer to YouTube கிளிக் செய்ததும் கூகிள் பிளே மியூசிக்கில் இருந்து நீங்கள் YouTube Music தளத்திற்கு அனுப்பப்படுவீர்கள். இங்கு நீங்கள் பிளேலிஸ்ட்கள், பாடல்கள், ஆல்பங்கள், விருப்பங்கள், பதிவேற்ற கொள்முதல் மற்றும் பில்லிங் தகவல்கள் ஆகிய அனைத்தையும் பரிமாறிக்கொள்ளலாம். அதேபோல், இந்த பக்கத்தில் Manage your music என்ற விருப்பமும் வழங்கப்பட்டுள்ளது. இது உங்களின் கூகிள் பிளே மியூசிக் அக்கௌன்ட்டை மேனேஜ் செய்ய அனுமதிக்கிறது.

கூகிள் மியூசிக் லைப்ரரியை டவுன்லோட் செய்ய இதை செய்யுங்கள்

இங்கு நீங்கள் உங்களின் கூகிள் மியூசிக் லைப்ரரியை டவுன்லோட் செய்துகொள்ளலாம் அல்லது உங்கள் ரெக்கமெண்டேஷன் ஹிஸ்டரி தகவலை டெலீட் செய்யலாம் அல்லது உங்கள் கூகிள் பிளே மியூசிக் அக்கௌன்ட்டை முழுமையாக டெலீட் செய்யலாம். உங்களின் கூகிள் மியூசிக் லைப்ரரியை டவுன்லோட் செய்ய விரும்பினால், நீங்கள் Google Takeout அழைத்துச்செல்லப்பட்டு, அங்கு உங்களின் டவுன்லோட் பதிவிறக்கம் செய்யக் கிடைக்கும்.

இனி யூடியூப் மியூசிக் மட்டுமே

கூகிள் கடந்த ஆண்டு அக்டோபரில் கூகிள் பிளே மியூசிக் நிறுத்தப்படும் என்று அறிவித்தது, அதனை தொடர்ந்து டிசம்பர் மாதத்திற்குள் இது அதிகாரப்பூர்வமாக மூடப்பட்டது. இப்போது வரை, கூகிள் நிறுவனம் கூகிள் பிளே மியூசிக் பயனர்களின் இசை மற்றும் தரவை தக்க வைத்துக் கொண்டுள்ளது, பதிவிறக்கம் செய்துகொள்ள அனுமதிக்கிறது. ஆனால், பிப்ரவரி 24 ஆம் தேதிக்குப் பின்னர் இதுவும் செயல்படாது. கூகிள் பிளே மியூசிக் முழுமையாக நீக்கப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக