Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 8 பிப்ரவரி, 2021

இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான ட்விட்டரின் பொதுகொள்கை இயக்குநர் மஹிமா கவுல் ராஜினமா.!

 இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான ட்விட்டரின்

உலகம் முழுவதும் ட்விட்டர் தளத்தை அதிகமாக பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பேஸ்புக் தளத்திற்கு அடுத்தப்படியாக இந்த தளத்தில் அதிகளவில் பயனர்கள் உள்ளனர். அதிலும் இந்தியாவில் ட்விட்டர் தளத்தை அதிகமாக பயன்படுத்தும் மக்கள் தினசரி எதாவது ஒரு ஹேஷ்டேக்குகளை ட்ரெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான ட்விட்டரின் பொதுக்கொள்கை இயக்குநர் மஹிமா கவுல் தனது பதவியை

ராஜினாமா செய்துள்ளார். மேலும் இதுபற்றி அதிகாரபூர்வமாக உறுதிசெய்துள்ள ட்விட்டரின் பொதுக்கொள்கை துணைத் தலைவர் மோனிக் மெக்கே தெரிவித்து என்னவென்றால்

பெரிய இழப்புதான்

இந்தியா மற்றும் தெற்கு ஆசியாவுக்கான ட்விட்டரின் பொதுக் கொள்கை இயக்குநர் மஹிமா கவுல் அவரது பதவியை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். மேலும் இந்த ஆண்டு துவக்கத்திலேயே அவர் இதை தெரிவித்தார். இது எங்களுக்கு பெரிய இழப்புதான் என மோனிக் மெக்கே கூறியுள்ளார்.

மார்ச் மாதம் இறுதி வரை பணியில் இருப்பார்

மேலும் மானிக் மெக்கே கூறியது என்னவென்றால்,ஐந்து வருடத்திற்கும் மேலாக பணியாற்றிய மகிமா அவரது வாழ்க்கையின் முக்கியமான நபர்கள் மற்றும் சொந்தங்கள் மீது கவனம் செலுத்த நினைக்கிறார். பின்பு அவர் வரும் மார்ச் மாதம் இறுதி வரை பணியில் இருப்பார் என்று மானிக் மெக்கே கூறியுள்ளார்.

250 ட்விட்டர் கணக்குகள்

இதற்குமுன்பு குடியரசு தினத்தன்று நடந்த டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்த நிலையில். விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் ட்விட்டர் பயனர்கள் ஹேஸ்டேக்குகளை ட்ரெண்ட் செய்தனர். இதனை தொடர்ந்து 250 ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன.

இருந்தபோதிலும் அந்த கணக்குகள் அடுத்து இரண்டு நாட்களில் பயன்பாட்டுக்கு வந்தது. இதனையடுத்து ட்விட்டர் ஒரு தலைபட்சமாக செயல்படுவதாகவும், அதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ட்விட்டர் நிர்வாகத்துக்கு கடிதம் எழுதியது. இந்த நிலையில் மகிமாவின் ராஜினாமாவும் அதிக கவனம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக