பழ
அங்காடியில் 50 க்கும் மேற்பட்ட பழ கடைகளில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை
அதிகாரிகள் தீடீர் சோதனையில் ரசாயன ஸ்பிரே பயன்படுத்தி 15 டன் வாழைத்தார்கள்
பறிமுதல்
சென்னை கோயம்பேடு
மார்க்கெட்டில் காப்கறி . பழங்கள் என பலவிதமான . பொருள்களும் கிடைக்கும். இங்குள்ள
பழங்கள் மார்க்கெட்டில் வியாபாரிகள் சிலர் ரசாயனங்கள்
கலந்து செயற்கை முறையில் பழங்களை பழக்க வைத்து விற்பதாக உணவுபாதுகாப்பு துறை
அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் வந்தன.
இந்நிலையில் கோயம்பேடு
மார்க்கெட்டில் சென்னை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் மற்றும் உணவு
பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தரமூர்த்தி தலைமையில் கொண்ட 7 பேர் கொண்ட அதிகாரிகள்
சுமார் 50 க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர்.
இதில் செயற்கை முறையில் பழுக்க வைத்த சுமார் ஒன்றை லட்சம் மதிப்புகள்ள 15 டன்
வாழைத்தார்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இது உணவு பாதுகாப்பு விதிகளுக்கு எதிரானது
என்பதால் 50 க்கும் மேற்பட்ட கடைகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. மேலும் இது குறித்து
உணவு பாதுகாப்பு துறை அதிகாரி கூறியதாவது. உணவு பாதுகாப்பு சட்டம் 2006 மற்றும்
ஒழுங்கு முறை விதிகள் 2011ன் படி கால்சியம் கார்பைடு கற்களை கொண்டு செயற்கை
முறையில் பழங்களை பழுக்கவைத்து விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் உடல் உபாதை வயிற்று போக்கு உள்ளிட்ட அஜீரண கோளாறுகள் ஏற்படுவதுடன்
புற்றுநோய்க்கு ஒரு காரணியாகவும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது போன்ற
சம்பவங்களில் வியாபாரிகள் ஈடுபடுவது குற்றமாகும் என கூறினர்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக