Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 5 மார்ச், 2021

ஆஹா இந்தா வந்துருச்சுல: செம அம்சம் மலிவு விலை- ரெட்மி நோட் 10, நோட் 10 ப்ரோ, நோட் 10 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்!

ரெட்மி நோட் 10 சீரிஸ் விலை

ரெட்மி நோட் 10 சீரிஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ, ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஒவ்வொரு மாடலும் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.

ரெட்மி நோட் 10 சீரிஸ் விலை

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.18,999 எனவும் 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.19,999 எனவும் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.21,999 ஆகவும் இருக்கிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ, நோட் 10 ப்ரோ மேக்ஸ் விலை

அதேபோல் ரெட்மி நோட் 10 ப்ரோ விலை அம்சங்கள் குறித்து பார்க்கையில், 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.15,999 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.16,999 எனவும் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.18,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு விலை ரூ.11,999 எனவும் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.13,999 எனவும் இருக்கிறது.

வண்ண விருப்பங்கள்

ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் டார்க் நைட், க்ளாசியல் ப்ளூ மற்றும் விண்டேஜ் ப்ரான்ஸ் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. அதேபோல் ரெட்மி நோட் 10 சாதனம் அக்வா க்ரீன், ப்ரோஸ்ட் ஒயிட் மற்றும் ஷேடோவ் பிளாக் ஆகிய வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

எப்போது விற்பனைக்கு வரும்

இந்த ஸ்மார்ட்போன் அமேசான், எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ், ஆஃப்லைன் கடைகளில் மார்ச் 16 மூலம் விற்பனைக்கு வருகிறது. அதேபோல் ரெட்மி நோட் 10 ப்ரோ மார்ச் 17, ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மார்ச் 18 ஆம் தேதி கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ரெட்மி நோட் 10 அம்சங்கள்

ரெட்மி நோட் 10 டூயல் சிம் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, 6.43 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆகியவை கொண்டுள்ளது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 678 எஸ்ஓசி செயலி மூலம் இயக்கப்படுகிறது.

ரெட்மி நோட் 10 கேமரா மற்றும் பேட்டரி

ரெட்மி நோட் 10 குவாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. 48 எம்பி பிரதான கேமரா, 8 எம்பி இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2எம்பி கேமராக்கள் உள்ளது. அதேபோல் முன்புறத்தில் 13 எம்பி செல்பி கேமரா வசதி இதில் இருக்கிறது. ரெட்மி நோட் 10 512 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகியவை உள்ளது.

ரெட்மி நோட் 10 ப்ரோ அம்சங்கள்

ரெட்மி நோட் 10 ப்ரோ 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு இருக்கிறது. இது ஸ்னாப்டிராகன் 732ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இதில் 64 எம்பி பிரதான கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 எம்பி கேமராக்கள் இருக்கிறது. முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, 5020 எம்ஏஎச் பேட்டரி இதில் இருக்கிறது. அதோடு 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது. இதில் 512 ஜிபி வரை விரிவாக்கக் கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வசதி இருக்கிறது.

ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் அம்சங்கள்

ரெட்மி நோட் 10 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஒத்த அம்சங்களையே கொண்டுள்ளது. இருப்பினும் கேமராவில் மட்டும் மாறுபட்டிருக்கிறது. இதில் 108 எம்பி முதன்மை கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 8 எம்பி மூன்றாம் நிலை கேமரா மற்றும் 2 எம்பி நான்காம் நிலை கேமராக்கள் ஆகியவை உள்ளது. அதேபோல் 16 எம்பி செல்பி கேமரா வசதி இதில் இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக