
இந்திய இராணுவத்திற்கு மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் பிரத்யேகமான 1,300 'மேட் இன் இந்தியா'வாகனங்களை வழங்கவுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.
மஹிந்திரா க்ரூப்பின் ஒரு பகுதியாக மஹிந்திரா பாதுகாப்பு அம்சங்கள் லிமிடெட் (MDSL) நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்துடன் இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கடந்த திங்கட்கிழமை ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின்படி மஹிந்திரா 1,300 லைட் ஸ்பெஷலிஸ்ட் வாகனங்களை தயாரித்து இந்தியா இராணுவத்திற்கு வழங்கவுள்ளது. இதற்கான தொகையாக ரூ.1,056 கோடியை அரசாங்கம் மஹிந்திரா க்ரூப்பிற்கு வழக்கியுள்ளது.
மேலும், இந்த பிரத்யேக இராணுவம் வாகனங்களுக்கான தயாரிப்பு பணிகள் 4 வருடங்களில் முடிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. மஹிந்திராவின் இந்த லைட் ஸ்பெஷலிஸ்ட் வாகனங்களை MDSL நிறுவனம் வடிவமைக்கிறது.
மேலும் அந்த நிறுவனத்தின் பணியாளர்களின் மூலமாக தான் இவ்வாறான இராணுவ வாகனங்கள் தயாரிக்கப்படுகின்றன. இத்தகைய வாகனங்களில் மிகவும் செயல்திறன்மிக்க சிறிய ஆயுத ஃபையர் உள்பட பல பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆர்ம்ஸ் ஃபையரை தன்னிச்சையாக செயல்படுத்தக்கூடிய இயக்குத்தளம் வாகனத்தின் செயல்பாட்டு பகுதியில் வழங்கப்படுகின்றது. இதுகுறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், லைட் ஸ்பெஷலிஸ்ட் வாகனம் ஒரு நவீன சண்டை வாகனமாகும்.
மேலும் இந்த வாகனம் நடுத்தர இயந்திர துப்பாக்கிகள், தானியங்கி கையெறி ஏவுதளங்கள் மற்றும் ஆண்டி-டேங்க் வழிக்காட்டப்பட்ட ஏவுகணைகளை சுமந்து செல்ல அங்கீகாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பாதுகாப்பு துறைக்கான இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி திறன் எந்த அளவில் உள்ளது என்பது தெரிய வந்துவிடும். மேலும் இது இந்திய அரசாங்கத்தின் ‘அத்மனிர்பர் பாரத்' மற்றும் ‘மேக் இன் இந்தியா' முயற்சிகளுக்கு மற்றொரு மைல்கல்லாகவும் விளங்கலாம்.
இந்திய இராணுவத்திற்கு இவ்வாறான வாகனங்களை வடிவமைத்து வழங்கவுள்ளதில் நாங்கள் பெருமை அடைகிறோம் என மஹிந்திரா டிஃபென்ஸ் பிரிவின் தலைவர் எஸ்பி சுக்லா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவத்திற்கான உள்நாட்டு வாகனங்களை உருவாக்குவதில் மஹிந்திரா முன்னணியில் உள்ளது. மேலும், எந்தவொரு நிலப்பரப்பையும் எளிதில் சமாளிக்ககூடிய தனிப்பயனாக்கப்பட்ட கவச வாகனங்களை உருவாக்குவதில் இந்திய இராணுவம் இந்திய வாகன உற்பத்தியாளர்களை சார்ந்திருப்பது உண்மையில் நல்ல விஷயமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக