இப்போது உள்ள PF முறையைப் போலவே கிராஜுவிட்டி பரிமாற்றத்திற்கும் இனி ஒரு வசதி கிடைகும். தொழில்துறை-தொழிற்சங்கம் கிராஜுவிட்டி மாற்றம் குறித்து ஒப்புக் கொண்டபின், இனி பணிமாற்றத்தின் போது பி.எஃப் போல கிராஜுவிட்டியும் மாற்றப்படும்.
ஒருவரது பணிபுரியும் நிறுவனம் மாறும்போது, அவரது EPF கணக்கும் ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாற்றப்படுவது போலவே, பணியாளர்களின் கிராஜுவிட்டி தொகையும் மாற்றப்படும். சம்பள வர்க்கத்திற்கான இந்த புதிய விதியை மத்திய அரசு விரைவில் கொண்டு வரப்போகிறது.
கிராஜுவிட்டியையும் மாற்றிக் கொள்ளலாம்:
இதற்காக, தற்போதுள்ள கிராஜுவிட்டி கட்டமைப்பை மாற்ற மத்திய அரசு, பணியாளர் சங்கம் மற்றும் தொழில் துறைக்கு இடையே ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. கிராஜுவிட்டி மாற்றங்கள் இப்போது சமூக பாதுகாப்புக் குறியீடு தொடர்பான விதிகளில் சேர்க்கப்படும். ஊடக செய்திகளின் படி, கிராஜுவிட்டி கட்டமைப்பை மாற்ற அரசு-தொழிற்சங்கமும், தொழில்துறையும் ஒப்புக் கொண்டுள்ளன. மேலும் இது சமூக பாதுகாப்பு குறியீடு (Social Security Code) தொடர்பான விதிகளில் சேர்க்கப்படும்.
கிராஜுவிட்டி மாற்றத்திற்கான வசதி கிடைக்கும்
இப்போது உள்ள PF முறையைப் போலவே கிராஜுவிட்டி பரிமாற்றத்திற்கும் இனி ஒரு வசதி கிடைகும். தொழில்துறை-தொழிற்சங்கம் கிராஜுவிட்டி மாற்றம் குறித்து ஒப்புக் கொண்டபின், இனி பணிமாற்றத்தின் போது பி.எஃப் போல கிராஜுவிட்டியும் மாற்றப்படும். பி.எஃப் போலவே, மாதாந்திர கிராஜுவிட்டி பங்களிப்பும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
வேலை நாட்களை நீட்டிக்க தயாராக இல்லை
தொழிலாளர் அமைச்சகம்-யூனியன்-தொழில்துறை இடையிலான கூட்டத்தில் இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. சி.டி.சி.யின் அத்தியாவசிய பகுதியாக கிராச்சுட்டி முன்மொழியப்பட்டது. இந்த விதி சமூக பாதுகாப்பு குறியீட்டின் விதியில் சேர்க்கப்படும். ஆதாரங்களின் படி, இது குறித்த இறுதி அறிவிப்பு அடுத்த மாதம் வரக்கூடும். இருப்பினும், கிராஜுவிட்டிக்காக வேலை நாளை நீட்டிக்க தொழில்துறை ஒப்புக் கொள்ளவில்லை. அதாவது, கிராஜுவிட்டிக்காக வேலைநாட்களை 15 நாட்களிலிருந்து 30 நாட்களாக மாற்ற ஒப்புக்கொள்ளப் படவில்லை.
கிராஜுவிட்டி என்றால் என்ன?
ஒரு நிறுவனத்தில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக பணியாற்றிய ஒரு ஊழியர் (Employees), சம்பளம், ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதிக்கு கூடுதலாக பெறும் பணத்தின் அளவு கிராஜுவிட்டி தொகை எனப்படும். அதில் ஒரு சிறிய பகுதி ஊழியரின் சம்பளத்திலிருந்து கழிக்கப்படுகிறது. ஆனால் நிறுவனம் சார்பாக கிராஜுவிட்டியின் பெரும்பகுதி வழங்கப்படுகிறது. கிராஜுவிட்டியின் அளவு இரண்டு விஷயங்களைப் பொறுத்தது. முதலாவதாக, அந்த ஊழியர் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தார் என்றும், இரண்டாவது அவரது கடைசி சம்பளத்தில் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படி என்ன என்பதும் பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக