Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 1 மார்ச், 2021

பைட்டான்ஸின் பிரம்மாண்ட விரிவாக்கம்.. 13,000 பேரை பணியில் அமர்த்த திட்டம்..!

பைட்டான்ஸின் பிரம்மாண்ட விரிவாக்கம்.. 13,000 பேரை பணியில் அமர்த்த திட்டம்..!

சீனா நிறுவனமான பைட்டான்ஸ் தனது ஆன்லைன் கல்வி பிரிவுக்கு 13,000 பேரை பணியமர்த்தல் உள்ளதாக அறிவித்துள்ளது.

இந்த ஆன்லைன் கல்வி வணிகத்தினை விரிவுபடுத்தி வரும் நிலையில், இந்த பணியமர்த்தலை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

பெய்ஜிங்கினை தளமாகக் கொண்ட இந்த இணைய தொழில்நுட்ப நிறுவனம், அடுத்த நான்கு மாதங்களில் சீனாவில் ஆசிரியர்கள் மற்றும் course designers உள்பட 10,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் 11 நகரங்களில் அதன் விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக ஸ்பிரிங் செமஸ்டரில் (spring semester) இது ஜனவரிக்கு பின்பு மேக்கு முன்பு 3000 புதியவர்களையும் பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஆக மொத்தத்தில் புதிதாக 13,000 பேரை பணிக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபரில் பைட்டான்ஸ் நிறுவனம் கல்வி தொழில்நுட்ப பிராண்டான டாலியை சீன சந்தையில் அறிமுகம் செய்வதாக அறிவித்தது. இது சீன மொழியில் பலமான வலிமை என்று பொருள்.

ஏற்கனவே பைட்டான்ஸ் 10,000 ஊழியர்களைக் கொண்டுள்ள நிலையில், விரிவாக்கத்தின் மத்தியில் தற்போது இந்த புதிய பணியமர்த்தல் திட்டங்களை பற்றியும் அறிவித்துள்ளது.

கொரோனா காலத்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக ஆன்லைன் கல்விக்கான கட்டாயத்திற்கு மாணவர்கள் தள்ளப்பட்டனர். இந்த நிலையில் தற்போது ஆன்லைன் கல்விக்கான தேவை கணிசமாக அதிகரித்துள்ளது.

பைட்டான்ஸ் தொடங்கப்பட்டு ஒன்பது வருடமான நிலையில், பைட் டான்ஸின் டிக்டாக் ஆப்பினால், உலகம் முழுவதும் இந்த நிறுவனத்தினை பற்றிய மதிப்பாய்வினை செய்தன. இதனால் பைட்டான்ஸ் கடந்த ஆண்டில் மிகுந்த அழுத்தத்தினை கண்டது. குறிப்பாக டிக்டாக் அதன் பயனர்களின் தரவுகளை சீனாவுடன் பகிர்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்த சமயத்தில் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தடை செய்யப்பட்டது.

இந்த நிலையில் தான் தற்போது பைட்டான்ஸ் தனது மற்ற வணிகங்களை ஊக்கப்படுத்தியும் விரிவுபடுத்தியும் வருகிறது.

இதகிடையில் சமீபத்தில் பெங்களூவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கிளான்ஸ் நிறுவனம், டிக் டாக்கினை வாங்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக