Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 1 மார்ச், 2021

சீனாவுடன் எங்கள் வணிகம் நிச்சயம் தொடரும்.. பஜாஜ் ஆட்டோ அதிரடி..!

கட்டுப்படுத்தினால் என்னவாகும்?

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனமான பஜாஜ் ஆட்டோ (Bajaj auto), சீனாவில் அதன் வணிகத்தினை கண்டிப்பாக தொடரும் என்று அறிவித்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ சீனா தங்களது முக்கிய சந்தை என்றும், ஆக சீனாவுடனான வர்த்தகம் நிச்சயம் தொடரும் என்றும் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் கூறியுள்ளார்.

உலகின் தொழிற்சாலை என்றழைக்கப்படும் சீனாவில் அனைத்து முன்னணி வாகன நிறுவனங்களின் ஆலைகளும் உள்ளன. அந்த வகையில் பஜாஜ் ஆட்டோவும் சீனாவின் தனது வணிகத்தினை தொடர்ந்து வருகிறது.

சீனாவுடன் இந்தியா வர்த்தகம்

சீனாவுடன் இந்தியா தொடர்ந்து வர்த்தகம் செய்ய வேண்டும் என்றும் ராஜீவ் கூறியுள்ளார். நாங்கள் சீனாவுடன் தொடர்ந்து வணிகத்தினை செய்வோம். ஏனெனில் இவ்வளவு பெரிய நாட்டை விடுத்து, இவ்வளவு பெரிய சந்தையை விடுத்து, எங்கள் வணிகத்தினை நாங்கள் நடத்தினால் காலபோக்கில் நாம் முழுமையடையாமல் இருப்போம். சீன சந்தையை இழந்தால், நாம் ஏழைகளாக இருப்போம் என்றும் கூறியுள்ளார்.

கட்டுப்படுத்தினால் என்னவாகும்?

ஆக நம்பகமான விநியோகச் சங்கிலிகளை கொண்டிருப்பதற்கான தொடர்ச்சியை, பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும் ராஜீவ் கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இறக்குமதியை கடுமையாக்கியபோது என்ன நடந்தது என்பதையும் நினைவு கூர்ந்துள்ளார். இது போன்ற ஒரு செயல் நீங்களே உங்களது மூக்கினை வெட்டுவது போல் ஆகும்.

போட்டி அதிகரிக்கத்தால் தான் விலை குறையும்

சீனாவில் இருந்து தயாரிப்பது மலிவானது என்றும், சில சமயங்களில் தாய்லாந்தில் இருந்து வாங்குவது மலிவானது என்றும் கூறினார். மேலும் போட்டி அதிகமாக உள்ள போது தான் விலை குறைவாக பெற முடியும். ஆக சீனாவின் வணிகம் மிக அவசியம். மேலும் பஜாஜ் ஆட்டோ போன்ற உலகளாவிய நிறுவனம், அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். உலகம் முழுவதிலும் டிஸ்டிரிபியூட்டர்ஸ், சப்ளையர்கள் இருப்பது அவசியம்.

அனைவரும் ஒன்றுக்கொன்று சார்ந்தவர்கள்

பஜாஜ் ஆட்டோ 225 சப்ளையர்கள் உள்ளனர். அவர்களில் பலர் நிறுவனத்திற்கு பிரத்தியேகமானவர்கள். பெரும்பாலும் அவர்களை சார்ந்து நிறுவனம் இருக்கிறது. அனைவரும் ஒன்றுக்கொண்டு சார்ந்தவர்கள் என்றும் ராஜீவ் கூறியுள்ளார். பஜாஜ் ஆட்டோ ஏற்கனவே மூன்று அல்லது நான்கு ஆசிய சந்தைகளில் கூட்டாளர்கள் மூலம் செயல்பட்டு வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக