ஒப்போ நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிலையில் சில பீட்டா சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்ட பின்னர் ஒப்போ எப்15 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 (ColorOS 11.1) அப்டேட் பெற துவங்கியுள்ளது.
ஒப்போ நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,
ஏற்கனவே சில ஓப்போ எப்15 பயனர்கள் ஆண்ட்ராய்டு 11 அப்டேட்-ஐ பெறத் தொடங்கியுள்ளனர்
என்று தெரிவித்துள்ளது. மேலும் சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும்
பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன்
ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த
ஆண்ட்ராய்டு அப்டேட்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக