Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 10 மார்ச், 2021

மார்ச் 17: இந்தியாவில் களமிறங்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள்.!

மார்ச் 17: இந்தியாவில் களமிறங்கும் புதிய ரெட்மி ஸ்மார்ட் டிவி மாடல்கள்

சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் வரும் மார்ச் 17-ம் தேதி ரெட்மி டிவி எக்ஸ் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக ரெட்மி டிவி எக்ஸ் சீரிஸ் ஆனது 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் என மூன்று அளவுகளில் வரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரெட்மி நிறுவனம் #XLExperience என்ற ஹேஷ்டேக் மூலம் டிவியை விளம்பரப்படுத்துகிறது. அதேபோல் இந்த மார்ச் 17-ம் தேதி வேறு பெயர்களில் கூட ரெட்மி ஸ்மார்ட் டிவிகள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. இப்போது ஆன்லைனில் வெளிவந்த ரெட்மி டிவி எக்ஸ் சீரிஸ் மாடல்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

50-இன்ச், 55-இன்ச், 55-இன்ச் ரெட்மி டிவி எக்ஸ் மாடல்கள் 4கே டிஸ்பிளே ஆதரவுடன் வெளிவரும். பின்பு MEMC தொழில்நுட்ப ஆதரவு, 60Hz of refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்..

புதிய ரெட்மி டிவி எக்ஸ் மாடல்கள் டால்பி ஆடியோ மற்றும் டி.டி.எஸ்-எச்.டி ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்கள் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனங்களின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

புதிய ரெட்மி டிவி மாடல்களில் 12.5W ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் netflix, youtube, amazon prime, hotstar உள்ளிட்ட பல்வேறு செயலிகளை இந்த ரெட்மி டிவி எக்ஸ் மாடல்களில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

50-இன்ச், 55-இன்ச், 55-இன்ச் ரெட்மி டிவி எக்ஸ் மாடல்கள் ஆனது குவாட்-கோர் கார்டெக்ஸ் ஏ73 பிராசஸர் வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு பேட்ச்வால் யுஐ உடன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் இந்த சாதனங்களில் இடம்பெறும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

XiaoAI வாய்ஸ் அசிஸ்டெண்ட், கூகுள் அசிஸ்டெண்ட், வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த ரெட்மி டிவி எக்ஸ் சீரிஸ் மாடல்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக