
வெஸ்டர்ன் டிஜிட்டல் (Western Digital) தற்பொழுது புதிய சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் மற்றும் சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் ப்ரோ போர்ட்டபிள் எஸ்.எஸ்.டி சாதனங்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய எஸ்.எஸ்.டிக்கள் 500 ஜிபி முதல் துவங்கி 4TB வரை ஸ்டோரேஜ் திறனைக் கொண்டுள்ளது. மேலும், சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் ப்ரோ மாடல் அதிக வேலையின் கீழ் வெப்பமடையாத அலுமினிய சேஸைக் கொண்டுள்ளது.
2000MBps வரை ரீட் அண்ட் ரைட் வேகம்
இந்த இரண்டு சாதனங்களும் பாஸ்வோர்ட் பாதுகாப்புடன் வருகிறது. சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் மற்றும் சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் ப்ரோ போர்ட்டபிள் எஸ்.எஸ்.டிக்கள் 256-பிட் ஏஇஎஸ் ஹார்ட்வேர் என்க்ரிப்ஷனை பயன்படுத்துகின்றது. புதிய போர்ட்டபிள் சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் ப்ரோ எஸ்.எஸ்.டி 2000MBps வரை ரீட்டிங் வேகத்தையும் 2000MBps வரை ரைட்டிங் வேகத்தையும் கொண்டுள்ளது.
சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம், சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் ப்ரோ விலை விபரம்
இந்தியாவில் சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம், சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் ப்ரோ எஸ்.எஸ்.டிகளின் விலை பற்றி இப்போது பார்க்கலாம். புதிய சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் ப்ரோ போர்ட்டபிள் எஸ்.எஸ்.டி 1TB, 2TB மற்றும் 4TB விருப்பங்களில் கிடைக்கிறது. 1 டிபி மாடலின் விலை ரூ. 19,999 ஆகவும், 2TB மாடலின் விலை ரூ. 34,999 ஆகவும் இருக்கிறது. 4TB மாடலின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை.
சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் போர்ட்டபிள் எஸ்.எஸ்.டி விலை
இதேபோல், புதிய சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் போர்ட்டபிள் எஸ்.எஸ்.டி 500 ஜிபி, 1 டிபி, 2 டிபி மற்றும் 4 டிபி மாடல்களில் கிடைக்கிறது. 500 ஜிபி மாடலின் விலை ரூ. 7,999 ஆகவும், 1TB மாடலின் விலை ரூ. 12,999 ஆகவும், 2TB மாடலின் விலை ரூ. 27,499 ஆகவும் இருக்கிறது. 4TB மாடல் விலை பற்றி தெரியவில்லை, மேலும் இது ஏப்ரல் 2021 க்கு பின்னர் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
ரூ.1000 தள்ளுபடி
எஸ்.எஸ்.டி கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்குக் கிடைக்கிறது. சாண்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் 500GB மாடலுக்கு இப்போது ரூ. 600 தள்ளுபடி கிடைக்கிறது. அதேபோல், சாண்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் ப்ரோ எஸ்எஸ்டி 1TB மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த தள்ளுபடி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. சான்டிஸ்க் எக்ஸ்ட்ரீம் புரோ போர்ட்டபிள் எஸ்.எஸ்.டிக்கள் வரையறுக்கப்பட்ட ஐந்தாண்டு உத்தரவாதத்துடன் வருகின்றது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக