Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 10 மார்ச், 2021

பெண்களுக்காகப் புதிய பேஸ்புக்.. நீதா அம்பானியின் புதிய நிறுவனம்..!

பல முக்கியப் பதவிகளும், தலைமைகளும்

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் பல முக்கியப் பதவிகளில் இருந்து வந்தாலும் கல்வி, நன்கொடை, விளையாட்டு எனப் பல துறைகளில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி பெண்களுக்காகப் பிரத்தியேகமாக ஒரு சோஷியல் மீடியா மற்றும் நெட்வொர்கிங் தளத்தை உருவாக்கியுள்ளார்.

நீதா அம்பானி அசத்தல்

'Her Circle' எனப் பெயரிடப்பட்டு உள்ள இந்தச் சமூக வலைத்தளத்தில் பெண்களுக்கான பாதுகாப்பான ஒரு தளத்தை அளிப்பது மட்டும் அல்லாமல் கன்டென்ட், சோஷியல் மீடியா, கோல் புல்ஃபில்மென்ட் கம்யூனிட்டி ஆகியவை இருக்கும் என இப்புதிய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பெண்களுக்காகச் சிறப்புத் தளம்

இந்தத் தளத்தில் சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி, தொழில்துறை, நிதியியல், நன்கொடை, மென்டார்ஷிப், லீடர்ஷிப் ஆகிய பிரிவுகளில் இருக்கும் முன்னோடிகள், நிபுணர்கள் ஆகியோரை இணைப்பதிலும் Her Circle பணியாற்றும் இதன் மூலம் இத்தளத்தில் இருக்கும் பெண்களுக்குப் பெரிய அளவில் உதவும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-ல் நீதா அம்பானி

புதிய வர்த்தகத்தைத் துவங்குவதும், உருவாக்குவதும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கும், முகேஷ் அம்பானிக்கும் புதியது இல்லை. ஆனால் நீதா அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாகத்தின் Non Exective director ஆக இருந்தாலும், நேரடி நிர்வாகத்தில் இல்லை.

பல முக்கியப் பதவிகளும், தலைமைகளும்

இதற்கு மாறாக நீதா அம்பானி ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் திருபாய் இண்டர்நேஷனல் ஸ்கூல், மும்பை இந்தியன்ஸ் - ஐபிஎல் கிரிகெட் அணி, மெட்ரோபோலிடன் மியூசியம் ஆப் ஆர்ட், இண்டர்நேஷனல் ஒலிம்பிக் கமிட்டி, ரிலையன்ஸ் பவுண்டேஷன் ஆகியவற்றில் முக்கியப் பதவிகள் வகிப்பது மட்டும் அல்லாமல் மொத்தமாகத் தலைமை ஏற்று நிர்வாகம் செய்து வருகிறார் நீதா அம்பானி.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக