Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 10 மார்ச், 2021

எதிர்பாராத அளவிற்கு வரவேற்பு!! கபீரா எலக்ட்ரிக் பைக்குகளை வாங்க ஒரேடியாக குவிந்த வாடிக்கையாளர்கள்!

எதிர்பாராத அளவிற்கு வரவேற்பு!! கபீரா எலக்ட்ரிக் பைக்குகளை வாங்க ஒரேடியாக குவிந்த வாடிக்கையாளர்கள்!

5000 யூனிட்கள் அடங்கிய கபீரா எலக்ட்ரிக் பைக்குகளின் முதல் தொகுப்பு வெறும் நான்கு நாட்களில் விற்று தீர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கோவாவை சேர்ந்த எலக்ட்ரிக் இரு-சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக அடியெடுத்து வைத்திருக்கும் கபீரா மொபைலிட்டி அதன் முதல் இரு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களை கேஎம்3000 மற்றும் கேஎம்4000 என்கிற பெயர்களில் கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த இந்த இரு எலக்ட்ரிக் பைக்குகளில் கேஎம்3000-இன் எக்ஸ்ஷோரூம் (கோவா) விலை ரூ.1.27 லட்சமாகவும், கேஎம்4000-இன் விலை சற்று அதிகமாக ரூ.1.35 லட்சம் என்ற அளவிலும் நிர்ணயிக்கபட்டுள்ளது.

அறிமுகத்திற்கு முன்னரே சோதனை ஓட்ட ஸ்பை படங்களின் மூலமாக வாடிக்கையாளர்கள் பலரது கவனத்தை ஈர்த்திருந்த இந்த கபீரா பைக்குகளுக்கு அறிமுக நாளில் இருந்தே பலத்த வரவேற்பு குவிய துவங்கியது. இதன் விளைவாக தயாரிப்பு நிறுவனம் முதல் தொகுப்பாக நிர்ணயித்த இவற்றின் 5,000 யூனிட்கள் வெறும் 4 நாட்களிலேயே விற்று தீர்க்கப்பட்டுள்ளன.

இந்த விஷயத்தை ஏற்கனவே நமது செய்தி தளத்தில் பதிவிட்டிருந்தோம். ஆனால் தயாரிப்பு நிறுவனம் சார்பில் எந்த கருத்தும் தெரிவிக்கப்படாமல் இருந்ததால் நமக்கு சற்று சந்தேகமாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது நமது சந்தேகத்தை போக்கும் விதத்தில் கபீரா மொபைலிட்டி நிறுவனம் இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

கேஎம்3000 முழுவதும் பேனல்களால் நிரப்பப்பட்ட எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாகும். இதன் தோற்றத்தை பார்க்கும்போது நமக்கு சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட கவாஸாகி நிஞ்சா 300 பைக் ஞாபகத்திற்கு வருகிறது.

கிட்டத்தட்ட 138 கிலோ எடையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ர்க் பைக்கில் 4.0kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு 6 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டார் உடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் உதவியுடன் சிங்கிள்-முழு சார்ஜில் 120கிமீ வரையிலும், அதிகப்பட்சமாக 100kmph வேகத்திலும் கேஎம்3000 பைக்கை இயக்க முடியும்.

கேஎம்4000 எலக்ட்ரிக் பைக் கூடுதல் விலைக்கு ஏற்ப சஸ்பென்ஷன் அமைப்பை சற்று ப்ரீமியம் தரத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளாக பெற்றுள்ளது. இதில் 4.4kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு 8 கிலோவாட்ஸ் மோட்டார் உடன் வழங்கப்பட்டுள்ளது.

இதன் பேட்டரியை முழுவதும் சார்ஜ் செய்து கொண்டு அதிகப்பட்சமாக 150கிமீ தூரம் வரையிலும், மணிக்கு 120கிமீ வேகத்திலும் செல்ல முடியும். முன்பதிவு நிறைவு பெற்றுள்ள இந்த பைக்குகளின் முதல் தொகுப்பின் டெலிவிரி பணிகள் துவங்க எப்படியும், மே மாதமாகி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக