தற்போது உலகெங்கிலும் கோவிட் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் கோவிட் தடுப்பூசி பெறுவதற்கு சில நாட்களுக்கு முன் என்ன செய்யக்கூடாது என்பன போன்ற பல விஷயங்கள் பேசப்பட்டு வருகின்றன. கோவிட் தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிப்பதற்கு, தடுப்பூசி போடுவதற்கு முன் பல விஷயங்களில் இருந்து விலகி இருக்குமாறு நிபுணர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இப்போது மருத்துவ துறையில் உள்ள வல்லுநர்கள் காலையில் ஒவ்வொருவரும் தவறாமல் செய்ய வேண்டிய இரண்டு விஷயங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி பின்பற்றியும் வருகின்றனர். அந்த இரண்டு விஷயங்கள் எவையென்பதைத் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
அந்த இரண்டு விஷயங்கள் என்ன?
கோவிட் தடுப்பூசியின் செயல்திறனை அதிகரிப்பதற்கு ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டிய இரண்டு விஷயங்கள் என்னவெனில் ஆரோக்கியமாக சாப்பிடுவது மற்றும் அதிக நீரைக் குடிப்பது. அதோடு தடுப்பூசி போடும் நாளில் எப்போதும் போது சாதாரணமாகவே இருக்கலாம் என்றும் பரிந்துரைக்கின்றனர். இதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
ஏன் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்?
ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், உடல் வறட்சியைத் தடுக்கவும், தண்ணீர் முக்கிய பங்காற்றுகிறது. மனித உடலானது சுமார் 70 சதவீத நீரால் ஆனால். இது பல்வேறு வழிகளில் உள்ளுறுப்புக்களின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. அதிலும் ஒருவர் கோவிட் தடுப்பூசி போடுவதற்கு முன் போதுமான நீரைப் பருகினால் தெளிவாக சிந்திக்க உதவும் மற்றும் தடுப்பூசியால் ஏற்படும் கடுமையான மனநிலை மாற்றம் தடுக்கப்படும்.
ஏன் ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்?
ஒருவரது அன்றாட வழக்கத்தில் ஆரோக்கியமான உணவுடன், போதுமான நீரை அருந்துவது மிகவும் முக்கியம். இந்த இரண்டுமே ஒருவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருப்பதற்கான அடிப்படை விஷயங்களாகும். குறிப்பாக இந்த இரண்டு விஷயங்களையும் கோவிட் தடுப்பூசிக்கு முன் தவறாமல் மேற்கொள்ள வேண்டியது முக்கியம்.
கோவிட் தடுப்பூசியின் பக்கவிளைவுகள்
நம் அனைவருக்குமே கோவிட் தடுப்பூசி வலி, வீக்கம், குளிர், தலைவலி, சோர்வு மற்றும் காய்ச்சல் போன்ற மிதமான பக்கவிளைவுகளுக்கு வழிவகுக்கலாம் என்பது தெரியும். ஆனால் இவை அனைத்துமே தடுப்பூசி உடலினுள் வேலை செய்கிறது என்பதற்கான அறிகுறிகள் மற்றும் இது முற்றிலும் சாதாணமானது தான். நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்பதன் மூலம் தடுப்பூசிக்கு பின் சந்திக்கும் தலைச்சுற்றல் அல்லது தலைவலி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.
தடுப்பூசிக்கு பின் கட்டாயம் மேற்கொள்ள வேண்டியவைகள்
மற்ற தடுப்பூசிகளைப் போலவே, கோவிட் தடுப்பூசி உடலினுள் வைரஸ்களை எதிர்க்கும் நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குவதற்கு சிறிது காலம் எடுக்கும். கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்கு இடைவெளியில் எடுக்க வேண்டும். ஆனால் தடுப்பூசி பெறுவது கொரோனா வைரஸுக்கு எதிரான உங்கள் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிக்காது. வைரஸின் செயல்திறனை அதிகரிக்க, நீங்கள் சில விஷயங்களைச் செய்ய வேண்டும். கீழே கொரோனா தடுப்பூசியைப் பெறுவதற்கு முன் கட்டயாம் செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாதவைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
சரியான தூக்கம் அவசியம்
கொரோனா தடுப்பூசியைப் பெற நீங்களும் திட்டமிட்டிருந்தால், அதற்கு குறைந்தபட்சம் 24 மணிநேரத்திற்கு முன்பே போதுமான தூக்கத்தைப் பெற வேண்டும். தூக்கமின்மை ஆன்டிபாடிகளை உருவாக்க தேவையான நோயெதிர்ப்பு செயல்முறைகளில் மாறுபாட்டை ஏற்படுத்தும். எனவே போதுமான தூக்கத்தைப் பெறுவது மிகவும் முக்கியம்.
உடற்பயிற்சி
முடிந்தால் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 2-3 நாட்களுக்கு முன் உடற்பயிற்சி அல்லது எவ்விதமான உடல் செயல்பாடுகளிலும் ஈடுபடுங்கள். இது தடுப்பூசிக்கு பிறகு நோயெதிர்ப்பு சக்தியை ஆதரிக்க உதவுகிறது.
அழற்சி எதிர்ப்பு மருந்துகளைத் தவிர்க்கவும்
வலியைக் குறைக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் மற்றும் அதிக உடல் வெப்பநிலையைக் குறைக்கவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான ஸ்டெராய்டு அல்லாத அழற்சி எதிர்ப்பு மருந்துகளையும் (NSAIDs) தவிர்க்கவும். இந்த மருந்துகள் உங்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தை மறைமுகமாக தடுத்து, தடுப்பூசியின் செயல்திறனைக் குறைக்கும்.
கவனமாக இருக்க வேண்டிய மற்ற விஷயங்கள்
* உங்களுக்கு குறிப்பிட்ட மருந்துகள் அழற்சியை ஏற்படுத்துமானால், கொரோனா தடுப்பூசி பெறுவதற்கு முன் மருத்துவரிடம் கூற வேண்டும். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட, மருத்துவ ஆலோசனையின் பேரில் செயல்பட வேண்டும்.
* சர்க்கரை நோயாளிகள் அல்லது இரத்த அழுத்தம் உள்ளவர்கள், அப்பாயின்மெண்ட் வாங்குவதற்கு முன், இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்த அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக