அழகு பராமரிப்பு என்று வரும் போது, கடைகளில் விற்கப்படும் பொருட்களை வைத்து மட்டுமே சரும அழகை அதிகரித்துவிட முடியும் என்பதில்லை. நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒவ்வொரு பொருட்களும் சரும ஆரோக்கியத்தையும், அழகையும் மேம்படுத்தக்கூடியவை. இதுவரை நாம் மஞ்சள் தூள், பட்டை தூள், தயிர், தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற சமையலறைப் பொருட்களை வைத்து தான் சருமத்திற்கு பராமரிப்புக் கொடுத்து, அழகை மேம்படுத்தி வந்தோம்.
ஆனால் நாம் உணவின் சுவைக்காக சேர்க்கப்படும் உப்பைக் கொண்டு பல அழகு பிரச்சனைகளைப் போக்கி, நம் அழகை கூட்டலாம் என்பது தெரியுமா? கீழே சருமத்தை மட்மின்றி, முடி, நகம் என ஒட்டுமொத்த உடல் அழகையும் மேம்படுத்த உப்பை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து மேற்கொண்டு, உங்கள் அழகையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
அழகு பராமரிப்பில் உப்பு
உப்பை அழகு பராமரிப்பின் போது பயன்படுத்துவது மிகச்சிறந்த யோசனை. ஏனெனில் உப்பு சருமத்தின் பாதுகாப்பு லேயரை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்கிறது. இப்போது உப்பை எந்த மாதிரியான விஷயங்களுக்கு எல்லாம் பயன்படுத்தலாம் என்பதைக் காண்போம்.
இறந்த செல்களை நீக்க..
உப்பு மிகச்சிறந்த ஒரு ஸ்கரப். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை திறம்பட நீக்கும். அதற்கு உப்பை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் தயாரித்து, அதை குளிப்பதற்கு முன் சருமத்தில் தடவி ஊற வைத்து, குளிக்கும் போது, மென்மையாக சிறிது நேரம் தேய்த்து விட்டு, பின் அலச வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் பளிச்சென்று பொலிவோடு காணப்படும்.
சருமத்தில் எண்ணெய் உற்பத்தியை சமநிலைப்படுத்தும்
உங்கள் சருமம் மென்மையாக இருக்க வேண்டுமானால், சருமத்தில் எண்ணெய் உற்பத்தியானது சமநிலையுடன் இருக்க வேண்டும். அதற்கு உப்பு பெரிதும் உதவி புரியும். ஆகவே 2 டீஸ்பூன் கல் உப்பை, 4 டீஸ்பூன் தேனுடன் சேர்த்து கலந்து, அதை சருமத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
பொடுகைப் போக்கும்
உப்பு தலைச்சருமத்தில் உள்ள பொடுகைப் போக்கி, ஆரோக்கியமான தலைச் சருமத்தைப் பெற உதவும். அதற்கு உப்பை ஸ்கால்ப் பகுதியில் தூவி விட்டு, பின் கை விரல்களை நீரில் நனைத்து, மென்மையாக ஸ்கால்ப் பகுதியை 10-15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். அதன் பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை நீரில் அலசி, மைல்டு கண்டிஷனரை முடிக்கு பயன்படுத்த வேண்டும்.
பொலிவான நகங்கள்
உப்பு நகங்களை வலுவாக்குவதோடு, க்யூட்டிகிள்களை மென்மையாக்கும். அதற்கு வெதுவெதுப்பான நீரில், ஒரு டீஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அந்நீரில் கை மற்றும் கால் விரல்களை பத்து நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் நகங்களில் உள்ள கறைகள் மற்றும் அழுக்குகள் நீங்கி, நகங்கள் பொலிவோடு இருக்கும்.
வெண்மையான பற்கள்
உப்பு கறைகளைப் போக்கக்கூடிய ஒரு பொருள். அதுவும் பற்களில் உள்ள கறைகளை நீக்கி, பற்களை பளிச்சென்று மாற்றும் திறன் கொண்டது. அதற்கு ஒரு டீஸ்பூன் உப்புடன் 2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து கலந்து, நீரில் நனைத்த டூத் பிரஷ் கொண்டு பற்களைத் தேய்க்க வேண்டும்.
நேச்சுரல் மௌத் வாஷ்
வாயில் உள்ள பாக்டீரியாக்கள் தான்,
கடுமையான வாய் துர்நாற்றத்தை உண்டாக்குகின்றன. இப்படிப்பட்ட பாக்டீரியாக்களை உப்பு
திறம்பட அழிக்கும். அதற்கு அரை கப் நீரில் அரை டீஸ்பூன் உப்பு மற்றும் அரை
டீஸ்பூன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்நீரை
வாயில் ஊப்பு நன்கு கொப்பளித்து, பின் துப்ப வேண்டும். இப்படி தினமும் செய்து
வந்தால், வாய் துர்நாற்றம் நீங்கி, வாய் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக