
எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட்-ஐ வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த புதிய அப்டேட் உடன் மார்ச் security patch நன்மையும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடல் கடந்த 2019-ம் ஆண்டு துவகத்தில் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்துடன் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆண்ட்ராய்டு 11 அப்டேட்
குறிப்பாக இந்த ஆண்ட்ராய்டு 11 அப்டேட் அறிவிப்பை அதிகாரப்பூர்வ நோக்கியா தளத்தில் ஒரு அதிகாரி அறிவித்துள்ளார். குறிப்பாக இந்த புதிய அப்டேட் பயனர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். அதுவும் இந்தியா உட்பட 34 நாடுகளில் உள்ள நோக்கியா 3.2 பயனர்களுக்கு இந்த அப்டேட் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு அப்டேட்.
மொபைல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக