சிரிக்கலாம் வாங்க...!!
---------------------------------------
பாபு : நேற்று பெண் பார்க்கப் போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்டா...!
கோபு : பெண் அவ்வளவு அழகா?
பாபு : இல்லடா... விஷயம் தெரிஞ்சு என் மனைவியும் அங்கே வந்துட்டா...!
கோபு : 😆😆
---------------------------------------
அருண் : என்னடா விட்டத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கே?
வருண் : இரண்டு ரெக்கை உள்ள பறவை எல்லாம் வானத்தைச் சுத்தி வருது! இந்த ஃபேனுக்கு மூணு ரெக்கை இருந்தும் வீட்டுக்குள்ளேயே சுத்துதே!
அருண் : 😛😛
---------------------------------------
நிழலின் அருமை... வெயிலில் தெரியும்...!!
---------------------------------------
🌳 ஒரு மரம் ஒரு வருடத்திற்கு 118 கிலோ ஆக்சிஜனை வெளிவிடுகிறது...
🌳 ஒரு ஏக்கரில் உள்ள மரங்களில் இருந்து, ஒரு வருடத்தில் கிடைக்கும் ஆக்சிஜன், 18 மனிதர்கள் வாழ்நாள் முழுவதும் சுவாசிக்க உதவுகிறது.
🌳 ஒரு ஏக்கரில் உள்ள மரங்கள் 2.6டன் கார்பன்டை ஆக்ஸைடை காற்றிலிருந்து உறிஞ்சிக்கொள்கின்றன.
🌳 நிழல் தரும் ஒரு மரம் வெயில் காலத்தில் 20 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்கின்றன.
---------------------------------------
தன்னம்பிக்கை வரிகள்...!!
---------------------------------------
நாம் சந்திக்கும் ஒவ்வொருவரும் நம்மைவிட ஏதோ ஒரு வகையில் சிறந்தவர்கள் எனும் மனோபாவம் இருந்தால், எல்லா மனிதர்களிடமிருந்தும் ஏதேனும் ஒன்றை கற்றுக்கொள்ள முடியும்.
வாழ்க்கை யாரையும் தோற்க விடுவதில்லை. ஒன்று நமக்கு ஏதாவது கற்றுக்கொடுக்கிறது, இல்லையென்றால் அனுபவத்தை பெற்று கொடுக்கிறது.
செய்த தவறுகளை ஒப்புக் கொள்வதற்கான மனத்தைரியமும், அதைத் திருத்திக் கொள்வதற்கான மனப்பக்குவமும் உங்களுக்கு இருந்தால் வெற்றி நிச்சயம்.
---------------------------------------
குறளும்... பொருளும்...!!
---------------------------------------
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
பொருள் :
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக