சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் சாதனத்திற்கு புதிய மென்பொருள் அப்டேட்-ஐ வழங்கியுள்ளது. அதன்படி இந்த புதிய அப்டேட் ஆனது கேமரா மேம்பாடுகளையும் ஜனவரி 2021 பாதுகாப்பு பேட்சையும் சாம்சங் கேலக்ஸி ஏ50எஸ் சாதனத்திற்கு கொண்டுவருகிறது.
கேலக்ஸி ஏ50எஸ் சாதனம்
இந்த கேலக்ஸி ஏ50எஸ் சாதனம் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்துடன் கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. பின்பு கடந்த ஆண்டு இந்த சாதனத்திற்கு UI 2.5 அப்டேட் கிடைத்து. ஆனாலும் இதுவரை இந்த கேலக்ஸி ஏ50எஸ் சாதனத்திற்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய அப்டேட்
தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த புதிய அப்டேட் A507FNXXU5CUB3என்ற எண்ணுடன் வருகிறது. குறிப்பிட்ட அப்டேட் பற்றிய தகவல் உங்களுக்கு வரவில்லை என்றால், நீங்கள் கைமுறையாக கூட இதை சரிபார்க்கலாம் மற்றும் அப்டேட் செய்யலாம், அதற்கு நீங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ்-ற்குள் செல்ல வேண்டும், பின்னர் சாப்ட்வெர் அப்டேட்டை சரிபார்க்கலாம். என்பது குறிப்பிடத்தக்கது.இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக