சமூகவலைதள பயன்பாடு என்பது பிரதானமாக மாறிவருகிறது. குறிப்பாக வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது வாடிக்கையாளர்கள் தேவையை பூர்த்தி செய் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
பல்வேறு அப்டேட்கள்
வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு அப்டேட்களை தொடர்ந்து அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. குறிப்பிட்ட அப்டேட்களுக்கு வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர் என்றே கூறலாம். அதில் அப்டேட்கள் சில வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவே இருக்கிறது.
புதிய அம்சம் அறிமுகம்
இந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது சுய அழிக்கும் படத்தை பகிரும் அம்சமாகும். முன்னதாக நிறுவனம் அறிமுகம் செய்ய மறைந்துபோகும் மெசேஜ்களை போன்றதாகும் இந்த அம்சம்.
சுய அழிக்கும் படங்கள்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் நிறுவனம் மறைந்துபோகும் மெசேஜ் அம்சத்தை அறிமுகம் செய்தது. விரைவில் வரும் இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் சுய அழிக்கும் படங்களை பகிரலாம். ஒருவர் அனுப்பும் படம் அவர் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் பெறுநருக்கு அழிந்துவிடும்
பெறுநர்கள் இதுபோன்ற அனுப்பப்படும் படங்களை திறந்தவுடன் ஒரு அறிவிப்பையும் காண்பார்கள். இந்த படம் பிற பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்படுகிறது. வாட்ஸ்அப் பயனர்கள் சுய அழிக்கும் படங்களை ஏற்றுமதிக்கு அனுமதிக்காது என WeBetainfo தெரிவிக்கிறது.
ஸ்க்ரீன் ஷாட் எடுத்துக் கொள்ளலாம்
இருப்பினும் வாட்ஸ்அப் நிறுவனம் அத்தகைய படத்தின் ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்தால் அதை தடுக்க எவ்வித நடவடிக்கையையும் சேர்க்கவில்லை. அதேபோல் பெறுநர் புகைப்படத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்தால் அனுப்புநருக்கு அது எச்சரிக்கை விடுக்காது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
தனியுரிமைக் குறித்த பிரதிபலிப்பு
பயனர்களுக்கு இது தனியுரிமைக் குறித்த பிரதிபலிப்பை ஏற்படுத்துவது போல் தவறான உணர்வை கொடுப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. பயனர்களுக்கு படங்களை அழிக்கும் அம்சம் வழங்கினாலும் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்தால் என்ன செய்வது என்ற கேள்விகள் எழுகின்றது.
சிலதினங்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட மெசேஜ்கள் மறைந்து போகும் அம்சத்திற்கான கால அவகாசம் ஏழு நாட்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 7 நாட்களுக்கு பிறகு வாட்ஸ்அப் மெசேஜ் தாமாகவே மறைந்துவிடும். வாட்ஸ்அப்பில் தனிப்பட்ட சேட்டிங் அல்லது குரூப்பில் இதை பயன்படுத்தலாம்.
வாடஸ்அப்பில் இந்த அம்சம் ஆன் செய்வதற்கு முன்பு பெறப்பட்ட அல்லது அனுப்பப்பட்ட மெசேஜ்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. வாட்ஸ்அப் சேட்டிங்கில் Disappearing Message அம்சத்தை இயக்கவும் முடக்கவும் விருப்பம் காண்பிக்கப்படும். பயனர்கள் தேவைக்கேற்ப ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக