
பிஎஸ்என்எல் நிறுவனம் பல தளங்களை மேம்படுத்தி 4ஜி சேவையை அடுத்த 6 மாதங்களில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் முழு விவரங்களை பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் 4ஜி சேவை
தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவையை வழங்க ஆயத்தமாகி வரும் நேரத்தில், அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் 4ஜி சேவையை முற்றிலும் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
எப்போது 4ஜி சேவையை தொடங்கும்
பிஎஸ்என்எல் நிறுவனம் எப்போது 4ஜி சேவையை தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை தொடங்க 49300-க்கும் மேற்பட்ட தளங்களை மேம்படுத்த இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்மூலம் அடுத்த 6 மாதங்கள் பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளை தொடங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிறந்த திட்டங்களை அறிவிக்கும் பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல் நிறுவனம் பிற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களை சமாளிக்க சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி வந்தாலும், முற்றிலும் 4ஜி என்ற சேவை இல்லாத காரணத்தால் நிறுவனம் சந்தையில் முன்னேற திக்குமுக்காடி வருகிறது.
டிராய் அறிவுறுத்தல்
பிஎஸ்என்எல் 4ஜி சேவை தொடங்க தாமதமான முக்கிய காரணம் அரசு நிறுவனங்களுக்கு உள்நாட்டு உற்பத்தியை தேர்வு செய்யுமாறு டிராய் அறிவுறுத்தியதே ஆகும். பிஎஸ்என்எல் 4ஜி சேவைகளுக்கு வெளிநாட்டு தயாரிப்புகளை பயன்படுத்த நிறுவனம் அனுமதிக்கப்படவில்லை.
விதிமுறைகளை நிறைவேற்றுவதில் சிக்கல்
தொலைத்தொடர்பு நிறுவனம் இந்தியா ஐபிஆர், உரிமம் சோர்ஸ் கோட் கொண்ட நிறுவனத்தை பயன்படுத்த வேண்டும் ஆனால் தொலைத்தொடர்பு நிறுவனம் இந்த விதிமுறையை நிறைவேற்றுவதில் சிக்கலில் இருப்பதாக தனியார் செய்தி நாளிதழ் தெரிவித்துள்ளது.
அடுத்த 6 மாதங்களுக்குள் திட்டம்
பிஎஸ்என்எல் நிறுவனம் குறித்த விவாதம் அரசு தரப்பில் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தாலும் கூடிய விரைவில் தொடங்கப்படும் என்றே பதிலே வருகிறது. பிஎஸ்என்எல் சோதனைக் கட்டமாக 4ஜி சேவைகளை ஆங்காங்கே தொடங்கியிருந்தாலும் அடுத்த 6 மாதங்களில் 4ஜி சேவைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. முழுமையாக அடுத்த 10 மாதங்களில் 4ஜி வரும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக