Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 26 மார்ச், 2021

ரூ.800-க்குள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் தரமான பட்ஜெட் போஸ்ட்பெய்ட் பிளான்கள்!

ரூ.800 க்குள் எது சிறந்த பட்ஜெட் போஸ்ட்பெய்ட் திட்டத்தை வழங்குகிறது... பிஎஸ்என்எல் ரூ.798 vs ஜியோ ரூ.799 vs ஏர்டெல் ரூ.749 vs வோடபோன் ஐடியா ரூ.799 நன்மைகள் ஒப்பிட்டு பார்க்கலாம் வாங்க...

சில மாதங்களுக்கு முன்பு, பிஎஸ்என்எல் தனியார் ஆபரேட்டர்களிடமிருந்து வரும் இலவசங்களை சமாளிக்க அதன் போஸ்ட்பெய்ட் திட்டங்களை திருத்தியது. திருத்தத்திற்குப் பிறகு, பிஎஸ்என்எல் கூடுதல் இணைப்புகளுடன் தொகுக்கப்பட்ட போஸ்ட்பெய்ட் திட்டங்களை வழங்கத் தொடங்கியது.


பேமிலி ஆட் ஆன் இணைப்புகளைக் கொண்ட அடிப்படை பிஎஸ்என்எல் போஸ்ட்பெய்ட் திட்டத்தின் விலை ரூ.798 முதல் தொடங்குகிறது. இதேபோன்ற விலை வரம்பில், ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவிலிருந்தும் போஸ்ட்பெய்ட் திட்டங்கள், கூடுதல் இணைப்புகளுடன் தொகுக்கப்படுகின்றன.


முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ ரூ.799 போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டத்தையும், ஏர்டெல் ரூ.749 திட்டத்தையும் கொண்டுள்ளது. மறுகையில் உள்ள Vi நிறுவனம் சமீபத்திய கட்டண உயர்வுக்குப் பிறகு, ரூ.799 திட்டத்தை கொண்டுள்ளது.

இந்த இடத்தில் தான் நாம் பி.எஸ்.என்.எல் ரூ.798 போஸ்ட்பெய்ட் திட்டத்தை மற்ற போட்டி நிறுவனங்களின் திட்டங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டியிருக்கிறது.

பிஎஸ்என்எல் ரூ.798 போஸ்ட்பெய்ட் திட்டத்தின் நன்மைகள்:

ரூ.798 திட்டத்துடன் மொத்தம் மூன்று போஸ்ட்பெய்ட் இணைப்புகளை பிஎஸ்என்எல் வழங்குகிறது. முதன்மை இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு, வரம்பற்ற அழைப்புகள், மாதத்திற்கு 50 ஜிபி டேட்டா, 150 ஜிபி வரை ரோல்ஓவர் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்கும். இரண்டு குடும்ப இணைப்புகளுக்கு, வரம்பற்ற குரல் அழைப்பு வசதி, ஒவ்வொரு இணைப்புக்கும் 50 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்கும். துரதிர்ஷ்டவசமாக, பி.எஸ்.என்.எல் நிறுவனம் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்துடன் எந்த OTT ஆப் சந்தாக்களையும் வழங்கவில்லை.

பிஎஸ்என்எல் ரூ.798 திட்டம் vs ஜியோ ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டம்:

பிஎஸ்என்எல் திட்டத்துடன் ஒப்பிடும்போது ரிலையன்ஸ் ஜியோ ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டம் ஒவ்வொரு நன்மையிலும் சிறந்தது. இது வரம்பற்ற குரல் அழைப்பு, 200 ஜிபி வரை ரோல்ஓவர் கொண்ட 150 ஜிபி 4 ஜி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவைகளை வழங்குகிறது. மேலும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் நன்மைகளுடன் இரண்டு குடும்ப இணைப்புகளையும் ஜியோ வழங்குகிறது. இந்த திட்டம் கூடுதல் செலவில்லாமல் நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாக்களுடன் அனுப்பப்படுகிறது.

பிஎஸ்என்எல் ரூ.798 திட்டம் vs பாரதி ஏர்டெல் ரூ749 போஸ்ட்பெய்ட் திட்டம்:

பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.749 போஸ்ட்பெய்ட் திட்டம் பற்றி பேசுகையில், இந்த பட்டியலில் மலிவான போஸ்ட்பெய்ட் திட்டம் இதுதான். முதன்மை இணைப்பிற்கான நன்மைகள் - வரம்பற்ற அழைப்பு, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஓவர் வசதியுடன் மாதத்திற்கு 125 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஏர்டெல் ரூ.749 குடும்பத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்கள் இரண்டு இலவச கூடுதல் எண்களுக்கு தகுதியுடையவர்கள்- ஒன்று வழக்கமான நன்மைகள் மற்றும் மற்றொரு டேட்டா ஒன்லி மட்டும். கூடுதல் எண்களுக்கு, ஏர்டெல் வரம்பற்ற அழைப்பு, முதன்மை இணைப்பிலிருந்து டேட்டா பகிர்வு மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகிய நன்மைகள் அணுக கிடைக்கும். மேலும் ஒரு வருடத்திற்கு அமேசான் ப்ரைமின் இலவச OTT சந்தா, ஒரு வருடத்திற்கு ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பிரீமியம், ஒரு வருடத்திற்கு ரூ.399 மதிப்புள்ள டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் இலவச மொபைல் பாதுகாப்பு போன்ற கூடுதல் நன்மைகளையும் வழங்குகிறது.

பிஎஸ்என்எல் ரூ.798 திட்டம் Vs வோடபோன் ஐடியா ரூ.799 போஸ்ட்பெய்ட் திட்டம்:

வோடாபோன் ஐடியா ரூ.799 குடும்ப போஸ்ட்பெய்ட் திட்டமானது 120 ஜிபி டேட்டா நன்மை, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் மாதத்திற்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இது ஒரு வருடத்திற்கு அமேசான் ப்ரைம், ஒரு வருடத்திற்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி மற்றும் இலவச வீ மூவிஸ் & டிவி ஆப் சந்தா போன்ற இலவச OTT பயன்பாட்டு சந்தாக்களுடன் வருகிறது. மேலும் இந்த தொலைதொடர்பு ஆபரேட்டர் ரூ.799 திட்டத்துடன் இரண்டு ஆட் ஆன்களை வழங்குகிறது. இரண்டாம் நிலை பயனர்களுக்கு, டேட்டா நன்மை மாதத்திற்கு 30 ஜிபி வரை இருக்கும், அதே நேரத்தில் முதன்மை இணைப்பு வைத்திருப்பவர் 60 ஜிபி டேட்டா நன்மையை  அனுபவிப்பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக