Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 26 மார்ச், 2021

Junior Instagram: 13 வயதை விட குறைவான குழந்தைகளுக்காக வருகிறது புதிய தளம்

Junior Instagram: 13 வயதை விட குறைவான குழந்தைகளுக்காக வருகிறது புதிய தளம்

சமூக ஊடகத் தளமான பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், சில நாட்களில் 13 வயது வரையிலான குழந்தைகளுக்காக தனி இன்ஸ்டாகிராம் செயலியை கொண்டு வரவுள்ளது. இந்த செயலியை மெசஞ்சர் கிட்ஸ் போலவே பெற்றோர்கள் கட்டுப்படுத்த முடியும்.

இந்த செய்தி அனைத்து பெற்றோர்களுக்கும் சமூக ஊடக ஆர்வலர்களுக்கும் ஒரு நல்ல செய்தியாக இருக்கும். சமூக ஊடகத் தளமான பேஸ்புக்கிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராம், சில நாட்களில் 13 வயது வரையிலான குழந்தைகளுக்காக தனி இன்ஸ்டாகிராம் செயலியை கொண்டு வரவுள்ளது. இந்த செயலியை மெசஞ்சர் கிட்ஸ் போலவே பெற்றோர்கள் கட்டுப்படுத்த முடியும்.

பேஸ்புக் 2017 ஆம் ஆண்டில் 6-12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான மெசஞ்சர் சேட் தளத்தை அறிமுகப்படுத்தியதாக அந்த அறிக்கை கூறியுள்ளது. இன்ஸ்டாகிராமின் தலைவர் ஆடம் மொசெரி கூறுகையில், இன்ஸ்டாகிராமின் ஒரு பதிப்பு குறித்த பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்று கூறினார். மொசெரி தனது ஒரு ட்வீட்டில், "குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரிடம் அவர்களுக்கென தனி செயலி உள்ளதா என கேட்கிறார்கள். தங்கள் நண்பர்களுடன் இணைய ஒரு தளத்தை அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்." என்று கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "மெசஞ்சர் கிட்ஸைப் போலவே இன்ஸ்டாகிராமின் இந்த பதிப்பையும் பெற்றோர் கட்டுப்படுத்த முடியும். இது தொடர்பான எங்கள் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. இது குறித்த கூடுதல் தகவல்களை எதிர்வரும் காலங்களில் பகிர்ந்து கொள்வோம்.” என்றார். மொசெரி துணைத் தலைவர் பவானி திவான்ஜியுடன் இன்ஸ்டாகிராமில் குழந்தைகள் தொடர்பான திட்டங்களை மேற்பார்வையிடுகிறார்.

இன்ஸ்டாகிராம்  லைட்டை மீண்டும் தொடங்க தொழில்நுட்ப நிறுவனமான பேஸ்புக் முடிவு செய்துள்ளது. இந்த முறை புகைப்பட பகிர்வு செயலியில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. 

தி வெர்ஜின் அறிக்கையின்படி, பேஸ்புக் தனது பிரபலமான செயலியான இன்ஸ்டாகிராமின் பதிப்பான இன்ஸ்டாகிராம் லைட்டை மீண்டும் தொடங்க முடிவு செய்துள்ளது. இது இந்தியா உட்பட 170 நாடுகளில் மீண்டும் தொடங்கப்படுகிறது.

தகவல் படி, Instagram Reels இந்த முறை லைட் பயன்பாட்டில் சேர்க்கப்படும். இருப்பினும், பயனர்கள் இந்த செயலியிலிருந்து வீடியோக்களைப் பதிவேற்ற முடியாது.

ஆண்ட்ராய்டு மொபைல் போன்களுக்கு மட்டுமே இன்ஸ்டாகிராம் லைட் மீண்டும் தொடங்கப்படும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இன்ஸ்டாகிராம் லைட்டை iOS இல் தொடங்க எந்த திட்டமும் இல்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக