-------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------
மன்னர் : இளவரசரும், என்னை மாதிரியே இருக்கிறார் என்று எதை வைத்து சொல்கிறீர் தளபதியாரே...
தளபதி : கத்திச்சண்டை கற்று கொடுக்கும் போதெல்லாம் காணாமல் போய்விடுகிறாராம் மன்னா..
மன்னர் : 😏😏
-------------------------------
தியாகு : என்னது... ஆண்களின் இதயத்துக்கு பாதுகாப்பான டி.வியா? புதுசா இருக்கே?
சோமு : ஆமா... புடவை விளம்பரம், நகை விளம்பரம் வரும்போது மட்டும் டி.வி. தானே ஆஃப் ஆயிடுமாம்.
தியாகு : 😂😂
-------------------------------
பிறமொழி சொற்கள் - தமிழ் சொற்கள்...!!
-------------------------------
சிபாரிசு - பரிந்துரை
நிபுணர் - வல்லுநர்
ஜாமீன் - பிணை
அபாயம் - பேரிடர்
அனுபவம் - பட்டறிவு
ஆயுள் - வாழ்நாள்
உபாத்தியார் - ஆசிரியர்
-------------------------------
தகவல் துணுக்குகள்...!!
-------------------------------
ஒரு மனிதனின் இதயத்தைவிட இரண்டு மடங்கு வேகத்தில் பூனையின் இதயம் துடிக்கின்றது.
கடலில் உள்ள ஆமைகள் மணிக்கு 40 மைல் வேகத்தில் நீந்தக் கூடியவை.
பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.
காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல. அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.
அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.
கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிவப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்சியை கொடுக்கிறது.
ரிலாக்ஸ் ப்ளீஸ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக