
மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் வெளிவந்த தகவலின்படி இந்த மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் ஆனது ஸனாப்டிராகன் 870 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டோ ஜி100 டீஸர்
குறிப்பாக இந்த சிப்செட் வசதி கேமிங் உட்பட பல்வேறு வசதிக்கு மிகவும் அருமையாக உதவும் என்றே கூறலாம். பின்பு மோட்டோரோலா அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் இந்த மோட்டோ ஜி100 டீஸர் ஒன்றும் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த மோட்டோ ஜி100 வெளியீட்டு தேதியை பற்றிய தகவல் எதுவும் வெளிவரவில்லை.
விரைவில் வெளிவரும் மோட்டோ ஜி100 ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட், யூ.எஸ்.பி-சி போர்ட், ஆடியோ ஜாக், பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறவனம். மேலும் கடந்த ஜனவரி மாதம் மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதே ஸ்மார்ட்போன் மோட்டோ ஜி100 என்ற பெயரில் மற்ற சந்தைகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை இப்போது பார்ப்போம்.
மோட்டோரோலா எட்ஜ் எஸ்
மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 2520×1080 பிக்சல் தீர்மானம், 90Hz refresh, எச்டிஆர் 10 ஆதரவு, 21:9 என்ற திரைவிகிதம், 560 nits பிரைட்நஸ் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.
மோட்டோரோலா எட்ஜ் எஸ் மெமரி
இந்த மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் வழங்கப்படும்.
மோட்டோரோலா எட்ஜ் எஸ் சிப்செட்
மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியுடன் அட்ரினோ 650 ஜிபியு ஆதரவும் கொண்டுள்ளது. எனவே கேமிங் போன்ற அம்சங்களு இந்த ஸ்மார்ட்போன் அருமையாக பயன்படும். மேலும் ஆண்ட்ராய்டு 11 சார்ந்த Motorola MyUI இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த சாதனம்.
மோட்டோரோலா எட்ஜ் எஸ் கேமராக்கள்
இந்த மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + ToF stereoscopic டெப்த் லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி + 8எம்பி டூயல் செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
மோட்டோரோலா எட்ஜ் எஸ் பேட்டரி
மோட்டோரோலா எட்ஜ் எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 20 வாட் டர்போ சார்ஜிங் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும்.
5 ஜி, டூயல் 4 ஜி, வோல்டிஇ, VoWi-Fi, வைஃபை 6, புளூடூத் 5.2, ஜிபிஎஸ் மற்றும் ஒரு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக