Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வெள்ளி, 12 மார்ச், 2021

உங்கள் iPhone கனவு நிறைவேறலாம்... அதிரடி விலையில் iPhone 12 .. காரணம் என்ன..!!

குறைந்த விலை ஐபோன் 12 (iPhone 12) கிடைக்கும் என்றால் யாருக்கு தான் சந்தோஷம் இருக்காது. இப்போது உங்களுடைய iPhone  கனவும் நனவாகும். தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் ஐபோன் 12 ஐ இந்தியாவிலேயே அசம்பிள் செய்ய தொடங்கியுள்ளது. இதன் சிறப்பு அம்சம் என்ன என பார்க்கலாம்.

ஆப்பிள் (Apple)  நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன் ஐபோன் 12 ஐ இந்தியாவில் அசம்ப்ளி தொடங்கியுள்ளதாக ஆப்பிள் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இருப்பினும், ஸ்மார்ட்போன் தயாரிக்க உள்ள சப்ளையரின் பெயரை நிறுவனம் வெளியிடவில்லை.

நாட்டில் ஐபோன் 12 அசம்ப்ளி யூனிட் இந்திய சந்தைக்கு மட்டுமே என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது, இந்தியாவில் மட்டுமே ஐபோன் 12 அசம்ப்ளி (Assembled in india) செய்யப்பட்டு விற்பனை செய்யப்படும்.

ஆப்பிள் ஏற்கனவே இந்தியாவில் பல ஐபோன் மாடல்களை அசம்ப்ளி செய்து வருகிறது. ஐபோன் 12 இந்தியாவில் அசம்ப்ளி செய்யப்படும் ஆறாவது தொலைபேசி ஆகும். முன்னதாக,iPhone SE, iPhone 6s, iPhone 7, iPhone XR  மற்றும் iPhone 11 ஆகியவையும் இந்தியாவில் அசம்ப்ளி செய்யப்பட்டன

இந்தியாவில் ஐபோன் 11அசம்ப்ளி செய்யப்பட்டதன் காரணமாக, அது இந்திய சந்தையில் மலைவான விலைக்கு கிடைத்தது மூலம் பெற்றனர். 

இந்தியாவில்அசம்ப்ளி செய்யப்படும் ஐபோன் 12 விலை 13,900 என்ற அளவில் குறைவாக இருக்கும் என உறுதியாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் கிடைக்கு ஐபோன் 12 (64 ஜிபி) விலை $904 (சுமார் ரூ. 66,000). இந்த தொலைபேசிக்கு சுங்க மற்றும் பிற வரிகளை விதித்த பின்னர் இந்தியாவில் 79,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதாவது, நேரடியாக 13,900 குறையும் என Gadgetnow அளித்துள்ள அறிக்கை கூறுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக