Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 13 மார்ச், 2021

நியாபகம் வருகிறதா?- 90ஸ் கிட்ஸ்-க்கு இவரை கண்டிப்பா தெரியும்: "கேசட் டேப்" தந்தை!

தொழில்நுட்ப பயிற்சியாளர்

மில்லியன் கணக்கான கேசட் ரோல்களுக்கு மையமாக இருந்த டச்சு கண்டுபிடிப்பாளரான லூ ஒட்டென்ஸ் இறந்துவிட்டார் என பிலிப்ஸ் அறிவித்துள்ளது. கேசட் டேப் 90 காலக்கட்டங்களில் முக்கிய அங்கம் வகித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

90ஸ் கிட்ஸ் வாழ்க்கையின் முக்கிய அங்கம் வகித்த சாதனங்களில் ஒன்று கேசட் டேப். தொழில்நுட்பம் வளர்ந்து வரும்நிலையில் நாம் பல கட்டங்கள் முன்னேறி விட்டோம். சிறிய ரக எஸ்டி கார்டில் சுமார் 2000 பாடல்கள் வரை சேமித்து வைத்துக் கொள்கிறோம். கையில் இருக்கும் கடிகாரத்தில் நமது உடல்நலத்தை அறிந்துக் கொள்கிறோம்.

 

ஆனால் பல ஆண்டுகளாக வீட்டில் பாடல் ஒலித்த காரணிகளில் கேசட் டேப் முக்கிய அங்கம் வகித்தது. கடைக்குசென்று பாட்டு கேசட் வாங்கும் போது இரண்டு பட பாடல்கள் கொண்ட ஒரு கேசட் இருக்கும். அதில் முன்புறம் ஒரு படத்தின் பாடலும், பின்புறம் ஒரு படத்தின் பாடலும் இருக்கும்.


சமயத்தில் ஒரே படத்திற்கு என ஒரு கேசட் இருக்கும். நண்பர்களிடம் ஒருசில படத்தின் பாட்டு கேசட் கடனாக வாங்கியும் பயன்படுத்தியது உண்டு. கேசட் டேப்பில் இசையை ரசித்த அனுபவம் 90ஸ் கிட்ஸ்களுக்கு அதிகமாகவே இருந்திருக்கும்.

 

டெல்ஃப்டில் உள்ள புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலைகழகத்தில் பயிற்சியாளராக இருந்த கட்டமைப்பு பொறியலாளர் ஓட்டென்ஸ். 1952 பிலிப்ஸ்-ல் இணைந்தார் மற்றும் டச்சு நிறுவனத்தின் தயாரிப்பு மேம்பாட்டுத் துறையின் தலைவராக நியமனம் செய்யப்பட்டார். டேப் ரெக்கார்டர்களுக்கான மாற்று பணிகளை தொடங்கிய போது அவரிடம் சிக்கலான ஸ்பூல் டேப் மட்டுமே இருந்தது.

 

மில்லியன் கணக்கான கேசட் ரோல்களுக்கு மையமாக இருந்த டச்சு கண்டுபிடிப்பாளரான லூ ஒட்டென்ஸ் இறந்துவிட்டார் என பிலிப்ஸ் அறிவித்துள்ளது. ஒட்டென்ஸ் சனிக்கிழமை 94 வயதில் இறந்துவிட்டார் என பிலிப்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.டெல்ஃப்டில் உள்ள புகழ்பெற்ற தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியலாளராக பயிற்சியளித்த அவர் 1952 இல் பிலிப்ஸ்-ல் சேர்ந்தார். அவர் டச்சு நிறுவனத்தின் தயாரிப்பு மேம்பாட்டு துறை தலைவராக இருந்தார்.


கேசட் டேப்பின் வளர்ச்சியின் போது 1960 காலக்கட்டத்தின் முற்பகுதியில் அவர் ஒரு சாதனம் வைத்திருந்தார் அது அவரது கோட் பாக்கெட்டில் வைக்க சரியாக இருந்தது என்றும் முதல் காம்பாக்ட் அந்த காலக்கட்டத்தில் பயன்பாட்டில் இருந்த பருமனான டேப் ரெக்கார்டர்களை காட்டிலும் இது மிக எளிதான ஒன்றாக இருந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது. 1962 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இறுதி தயாரிப்புக்கு பின் இது உலகளாவிய வெற்றி சாதனமாக மாறியது. 100 பில்லியனுக்கும் அதிகமான கேசட்கள் விற்கப்பட்டது எனவும் ஏணைய இசை ரசிகர்கள் வானொலியில் இருந்து நேரடியாக தங்கள் தொகுப்புகளை பதிவு செய்ய இது பயன்பட்டது எனவும் கூறப்படுகிறது.

காம்பாக்ட் டிஸ்க் வளர்ச்சியின் மூலமாக அதன் புகழ் குறைந்தது எனவும் கூறப்படுகிறது. கேசட் டேப்பின் வெற்றி அதன் எளிமையின் மூலம் உருவானது என பிலிப்ஸ் அருங்காட்சியகம் வெளியிட்ட பேட்டியில் ஓட்டன்ஸ் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக