Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

சனி, 13 மார்ச், 2021

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வெச்சிருக்கீங்களா?, அப்போ நீங்க தான் இத முதலில் தெரிஞ்சிக்கனும்...!!

ஹோண்டா ஹைனெஸ் சிபி350 பைக் வெச்சிருக்கீங்களா?, அப்போ நீங்க தான் இத முதலில் தெரிஞ்சிக்கனும்...!!

சில குறிப்பிட்ட ஹைனெஸ் சிபி350 பைக்குகள் தாமாக முன்வந்து தொழிற்சாலைக்கு மீண்டும் அழைக்கப்படுவதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மீட்டியோர் 350 பைக்கிற்கு போட்டியாக கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனம் ஹைனெஸ் சிபி350 பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது.

மீட்டியோரை காட்டிலும் சற்று கூடுதலாக, ரூ.1.85 லட்சம் என்ற ஆரம்ப விலையில் விற்பனை செய்யப்பட்டாலும் இந்த ஹோண்டா சிபி பைக்கிற்கும் மீட்டியோர் 350 பைக்கிற்கு இணையாக வாடிக்கையாளர்கள் குவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தான் தற்போது நவம்பர் 25ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 12ஆம் தேதி வரையில் தயாரிக்கப்பட்ட ஹைனெஸ் சிபி350 பைக்குகளை சிறிய பழுது பார்ப்புக்கு மீண்டும் தொழிற்சாலைக்கு அழைப்பதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தில் இருந்து அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

மேற்கூறப்பட்ட காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட சிபி350 பைக்கில் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பில் முரண் தண்டு 4வது கியரில் வேறுப்பட்ட தரநிலை கொண்ட மெட்டீரியல் பயன்படுத்தப்பட்டுள்ளதை ஹோண்டா நிறுவனம் இப்போது கண்டறிந்துள்ளது.

இந்த கவனக்குறைவால் பைக்கின் ஆயுட்காலம் குறைய வாய்ப்புள்ளதாகவும், இதனால் தான் இந்த திரும்ப அழைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான புகார்கள் எதுவும் வாடிக்கையாளர்களிடம் இருந்து இதுவரையில் வெளிவரவில்லை என்றாலும், முன்னெச்சரிக்கையாக தாமாக இந்த நடவடிக்கையை ஹோண்டா கையில் எடுத்துள்ளது. இதன்படி பைக்குகள் வருகிற 23ஆம் தேதியில் இருந்து அழைக்கப்பட்டு இலவசமாக அந்த குறிப்பிட்ட பழுதை சரி பார்த்து வழங்கப்படவுள்ளன.

மேற்குறிப்பிட்ட காலக்கட்டத்தில் எத்தனை ஹைனெஸ் சிபி350 பைக்குகள் தயாரிக்கப்பட்டன என்பது குறித்த விபரங்கள் இல்லை. ஆனால் கவலை வேண்டாம், அந்த பைக்குகளின் உரிமையாளர்களை தொலைப்பேசி அழைப்பு, இ-மெயில் மற்றும் குறுஞ்செய்திகள் மூலமாக தொடர் கொள்ள ஏற்கனவே ஹோண்டாவின் பிக்விங் டீலர்கள் ஆரம்பித்துவிட்டனர்.

இருப்பினும், தனது ஹைனெஸ் சிபி350 பைக்கும் இந்த திரும்ப அழைப்பு நடவடிக்கையில் உட்படுகிறதா என்பதை தெரிந்துகொள்ள வாடிக்கையாளர்கள் தனது வாகனத்தின் விஐ எண்ணை பயன்படுத்தி ஹோண்டா பிக்விங் இணையத்தளத்தை (www.hondabigwing.in) தொடர்பு கொள்ளலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக