------------------------------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்..!!
-------------------------------------------------------------
ஆசிரியர் : ரேடியோவை கண்டுபிடிச்சவர் ஆயுசுஊழுNஐ.
மாணவன் : எங்க வீட்ல-யும் ஒரு ரேடியோ காணாமல் போச்சு சார். அவர் வந்து கண்டுபிடிச்சு கொடுப்பாரா?
ஆசிரியர் : 😧😧
-------------------------------------------------------------
ஆசிரியர் : பாடம் எல்லாம் முடிஞ்சுப் போச்சு.. ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. எதுவா இருந்தாலும் தயங்காம கேளுங்க..
மாணவன் : சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?
ஆசிரியர் : 😡😡
-------------------------------------------------------------
பறவைகளின் விந்தைத் தூக்கம்...
-------------------------------------------------------------
..
🐦 ஹெரான் எனப்படும் கொக்கு இனம் சிறிதளவு தண்ணீரில் நின்று கொண்டே தூங்கும்.
🐦 வெளவால்கள் மரத்தில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டு தூங்கும்.
🐦 ஸ்விப்ட் பறவைகள் கூட்டமாக ஒன்றையொன்று அணைத்தபடி தூங்கும்.
🐦 கடல் புறாக்கள் நீரில் மிதந்து கொண்டே தூங்கும்.
🐦 கிவி பறவை பூமிக்கடியில் காணப்படும் வளைகளில் நுழைந்து கொண்டு தூங்கும்.
-------------------------------------------------------------
வாங்க பழகலாம்...!!
-------------------------------------------------------------
1. கண்டக்டர் எப்படி பழகுவார்?
'ரைட்"டாகப் பழகுவார்...!
2. கண்; டாக்டர் எப்படி பழகுவார்?
எல்லோருக்கும் தெரியும்படி...!
3. டைலர் எப்படி பழகுவார்?
அளவோடு...!
4. கணக்கு வாத்தியார் எப்படி பழகுவார்?
கணக்காக...!
5. கேஷியர் எப்படி பழகுவார்?
எண்ணிப் பார்த்து...!
6. ஸ்வீட் கடைக்காரர் எப்படி பழகுவார்?
இனிக்க இனிக்க...!
7. பூக்கடைக்காரர் எப்படி பழகுவார்?
மலர்ந்த முகத்துடன்...!
8. நகை ஆசாரி எப்படி பழகுவார்?
உரசிப் பார்த்து...!
9. காய்கறிக் கடைக்காரர் எப்படி பழகுவார்?
வாடாமல் வதங்காமல்...!
10. எண்ணெய் வியாபாரி எப்படி பழகுவார்?
வழவழா, கொழ கொழான்னு...!
11. விமானி எப்படி பழகுவார்?
உயர் தரமாய்...!
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக