Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 8 மார்ச், 2021

ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒன்னுதான் பெருசு... இன்றைய கடி... ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

--------------------------------------------------

கலக்கலான காமெடிகள்...!!

--------------------------------------------------

சேகர் : பசங்க என்ன பண்றாங்க, சார்?

மனோகர் : பெரியவன் ஸ்டேட் பேங்க்... மருமகள் ஐஓபி..

சேகர் : ஓ....

மனோகர் : அடுத்தவன் கனரா பேங்க், அவன் சம்சாரம் ஐசிஐசிஐ... பொண்ணுதான் கடைக்குட்டி.... அவ இண்டியன் பேங்க்..

சேகர் : பரவாயில்லை சார்... எல்லோரும் செட்டிலாயிட்டாங்க..

மனோகர் : கடுப்ப கிளப்பாதீங்க... எல்லோரும் ஏடிஎம் வரிசையில நிக்குறாங்க..

சேகர் : 😧😧 

--------------------------------------------------

பாரதியார் பாடல்கள்...!!

--------------------------------------------------

நல்லதோர் வீணை செய்தே - அதை

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?

சொல்லடி சிவசக்தி - எனைச்

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.

வல்லமை தாராயோ, - இந்த

மாநிலம் பயனுற வாழ்வதற்கே?

சொல்லடி, சிவசக்தி - நிலச்

சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

விசையுறு பந்தினைப்போல் - உள்ளம்

வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,

நசையறு மனங்கேட்டேன் - நித்தம்

நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,

தசையினைத் தீசுடினும் - சிவ

சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,

அசைவறு மதிகேட்டேன் - இவை

அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

--------------------------------------------------

  நோ... நோ... அடிக்க வரக்கூடாது...!!

--------------------------------------------------

பயம் தான் தோல்விக்கு முக்கிய காரணம்... அதனால் இனிமேல் கண்ணாடிய பாக்காதீங்க...!😎

தண்ணீர் மேல கப்பல் போனா உல்லாசம்... கப்பல் மேல தண்ணீர் போனா கைலாசம்...!!😛

ஆயிரம் தான் இருந்தாலும் ஆயிரத்து ஒன்னுதான் பெருசு...!!😊

காசு இருந்தா கால் டாக்சி... காசு இல்லைன்னா கால் தான் டாக்சி...!!!😇

--------------------------------------------------

தமிழ் சொற்கள்...!!

--------------------------------------------------

மராமத்து இலாகா - பொதுப்பணித் துறை

ஜாக்கிரதை - விழிப்பு

பைசல் செய் - தீர்த்து வை

ஆஸ்தி - சொத்து

வேதம் - மறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக