நெட்பிளிக்ஸ் தளம் இந்தியாவில் பயனர்களுக்கு சிறந்த திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. நெட்பிளிக்ஸ் தற்போது மொபைல்+ திட்டத்தை தங்களது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டமானது ரூ.299 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மொபைல்+ திட்டத்தின் கூடுதல் அம்சம்
இந்த மொபைல்+ திட்டத்தின் கூடுதல் அம்சம் என்னவென்றால் இதன் உள்ளடக்கம் எச்டி தரத்தில் வழங்கப்படுகிறது. குறைந்த விலையில் எச்டி தர உள்ளடக்கத்தை பார்க்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்தியாவில் அடிப்படை நெட்பிளிக்ஸ் மொபைல் திட்டத்தின் விலை ரூ.199 ஆக உள்ளது. ஆனால் இந்த திட்டத்தின் மூலம் உள்ளடக்கத்தை எஸ்டி தரத்தில் மட்டும் பார்க்கமுடியும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
மொபைலில் ஓடிடி அணுகல்
புதிய ரூ.299 திட்டம் மொபைலில் ஓடிடி அணுகலை மேற்கொள்பவர்கள் சிக்கலை தவிர்க்கும் விதமாக இருக்கிறது. மொபைல் ப்ளஸ் திட்டத்திற்கும் ரூ.199 திட்டத்திற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்னவென்றால், இது எச்டி தர உள்ளடக்கத்தை வழங்குகிறது.
மொபைல் நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீம்
மொபைல் நெட்பிளிக்ஸ் ஸ்ட்ரீம் செய்பவர்கள் அவர்கள் விரும்புதம் தரத்தை தேர்வு செய்து கொள்ளலாம், அடிப்படை விலை மற்றும் மொபைல் ப்ளஸ் திட்டத்திற்கான வித்தியாசம் ரூ.100 ஆகும். நெட்பிளிக்ஸ் மொபைல்+ திட்டம் ஒரு சமயத்தில் ஒரு திரை கட்டுப்பாடை வழங்குகிறது. அதேபோல் ரூ.649 திட்டத்தில் எச்டி உள்ளடக்கத்தை ஒரே நேரத்தில் 2 திரைகளை ஒரு மாதத்திற்கு பார்க்க முடியும். அதே சமயத்தில் இந்த புதிய உள்ளடக்கம் ரூ.299-க்கு எச்டி தர அனுபவத்தை வழங்குகிறது.
மொபைல்+ திட்டத்திற்கான முக்கிய வேறுபாடுகள்
நெட்பிளிக்ஸ் மொபைல் மற்றும் மொபைல்+ திட்டத்திற்கான முக்கிய வேறுபாடானது வீடியோ தரம் ஆகும். நெட்பிளிக்ஸ் ஸ்டாண்டர்ட் மொபைல் திட்டத்தில் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்பில் அணுகலாம், மொபைல்+ திட்டத்தில் பயனர்கள் கணினிகள், லேப்டாப்கள் ஆகியவைகளிலும் உள்ளடக்கத்தை அணுகலாம். பெரிய திரையில் வீடியோ பார்க்கும் அனுபவம் இதில் கிடைக்கும். இந்த திட்டம் சோதனையில் இருப்பதாகவும் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பொறுத்து இந்த திட்டம் நிரந்தரம் செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாதாந்திர சந்தா கட்டணம்
நெட்பிளிக்ஸ் நிறுவனம் எப்போதுமே அதன் சேவைகளை வழங்க மாதாந்திர சந்தா கட்டணத்தை பல சலுகையோடு வழங்கினால் அந்த வாடிக்கையாளர்களை தக்க வைப்பதில் கவனமாக செயல்படும். சமீபத்தில் நெட்பிலிக்ஸ் அதன் பங்குகளை உயர்த்திய நிலையில், ஆப்பிள் டிவி பிளஸ் மற்றும் டிஸ்னி பிளஸ் ஆகியவற்றிலிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. இது இரண்டும் உலகளவில் 50மில்லியனுக்கும் அதிகமான கட்டண பயனர்களை ஈர்த்துள்ளது.
ஆவணப்படங்களை திரையிட அனுமதி
மேலும் ஆவணப்படங்களை அணுகுவதற்கான ஆசரியர்களின் கோரிக்கைகளுக்கு பதிலளித்தல் என்ற தலைப்பின் கீழ் பல ஆண்டுகளாக நெட்பிலிக்ஸ் நிறுவனம் ஆசிரியர்களை தங்கள் வகுப்பறைகளில் ஆவணப்படங்களை திரையிட அனுமதித்துள்ளது,ஆனாலும் பள்ளிகள் மூடப்பட்டதால் இது சாத்தியமில்லை என்று கூறப்படுகிறது.
ஓடிடி சேவைகள் அணுகல்
ஸ்மார்ட் போனில் சீரிஸ் பார்க்க தொடங்கிய அனைவரும் அமேசான்பிரைம், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஓடிடி சேவைகளில் சந்தாதாரர்களாக இருப்பார்கள். இந்த நிலையில் கொரோனா பரவல் அச்சம் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதை தடுப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக