-----------------------------------------------
கொஞ்சம் சிரிங்க பாஸ்...!!
-----------------------------------------------
ஊழியர் : அடுத்த வாரம் லீவு வேணும் சார்..
முதலாளி : எதுக்கு லீவு?
ஊழியர் : எனக்கு அடுத்த வாரம் கல்யாணம் சார்..!
முதலாளி : உனக்கு எந்த முட்டாள் பொண்ணு கொடுக்கிறான்?
ஊழியர் : உங்கப் பொண்ணை தான் கல்யாணம் செஞ்சுக்கப் போறேன்... சார்.
முதலாளி : 😳😳
-----------------------------------------------
கோபு : விஷய ஞானத்தோட பேசுறீங்க... நீங்க பேசாம பெரிய பேச்சாளர் ஆயிடலாமே..
பாபு : பேசாம எப்படிங்க பேச்சாளர் ஆகுறது..?
கோபு : 😜😜
-----------------------------------------------
மூளைக்கு வேலை...!!
-----------------------------------------------
1. ஒரு போலீஸ் தெரு வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு ஓட்டலில் இருந்து 'ஜான் என்னை சுட்டுவிடாதீர்கள்" என சத்தம் கேட்டது. உடனே போலீஸ் அந்த ஓட்டலுக்குள்ளே ஓடினார். அங்கே தலா ஒரு டாக்டர், வக்கீல், பால்காரர், சமையல்காரர் மற்றும் இறந்த சடலம் இருந்தது. போலீஸ் யாரையும் விசாரிக்காமல் பால்காரரை கைது செய்தார். பால்காரர் தான் கொலை செய்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. யாரும் இவர் தான் சுட்டார் என சொல்லவும் இல்லை. அப்படி இருந்தும் போலீஸ், பால்காரர்தான் கொலையாளி என எப்படி கண்டுபிடித்தார்?
2. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கப்பல் தீடீரென மூழ்க ஆரம்பித்தது. கப்பலில் ஏதும் கோளாறோ, புயலோ, ஓட்டையோ என எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனாலும் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மூழ்க ஆரம்பித்தது. அது ஏன்?
விடை கீழே...👇👇
-----------------------------------------------
இது சிரிப்பதற்கு மட்டுமே...!!
-----------------------------------------------
கணவன், மனைவியிடம்... இன்னக்கி நல்ல நாள்-ன்னு சொன்னார். மறுநாளும், இன்னக்கி நல்ல நாள்-ன்னு சொன்னார். திரும்பவும் அடுத்த நாளும், இன்னக்கி நல்ல நாள்-ன்னு சொன்னார்.
இப்படியே ஒரு வாரம் பொறுத்து பார்த்த மனைவிக்கு கோபம் உச்சத்தை தொட்டது... ஏன் இப்படி ஒரு வாரமா, இன்னக்கி நல்ல நாள், இன்னக்கி நல்ல நாள்-ன்னு என்கிட்டே சொல்லிகிட்டே இருக்கீங்க... என்ன ஆச்சு உங்களுக்கு?
கணவர் சொன்னார்... போன வாரம் நாம சண்டை போடும் போது... நீ என்ன சொன்ன..? இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தீங்கன்னா ஒரு நல்ல நாளா பாத்து எங்க அம்மா வீட்டுக்கு போயிடுவேன் பாத்துக்கோங்கன்னு சொன்னல, அதான் உனக்கு ஞாபகப்படுத்தினேன்.
-----------------------------------------------
விடை :
-----------------------------------------------
1. அங்கு இருந்ததில் பால்காரர் மட்டுமே ஆண். மற்ற அனைவரும் பெண்கள். போலீஸ் அவரின் பெயரை வைத்துதான் கைது செய்தது.
2. அது நீர்மூழ்கி கப்பல்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக