![]()
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஊரடங்கு குறித்து சுகாதாரத் துறைச் செயலாளர் பேசியுள்ளார்.
தமிழ்நாட்டில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து,
நாள் ஒன்றுக்கு பாதிப்பு 1000ஐ கடந்து வருகிறது. இதனால் தமிழக தலைமை செயலாளர்
ராஜிவ் ரஞ்சன் ஆலோசனை மேற்கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து
வருகிறார்.
பள்ளிகள், கல்லூரிகள் மூலம் மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரவியது.
இதனால் பள்ளிகளுக்கு மீண்டும் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கல்லூரிகளுக்கும் விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்தனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் பொது முடக்கம் அமல்படுத்தப்படுமா என்ற கேள்வி
எழுந்துள்ளது.
இந்நிலையில் இது குறித்து சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்
பதிலளித்துள்ளார். “தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படாது. அதிகரித்து வரும்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த குறிப்பிட்ட தெரு, வீடு ஆகிய பகுதிகளில் மட்டும்
ஊரடங்கை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. மினி ஊரடங்கு தான்
அமல்படுத்தப்படும். முழு ஊரடங்கு என்று யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படும்
தகவல்களை நம்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக