Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 25 மார்ச், 2021

எல்லாமே குறைந்த விலை: டெக்னோ இயர்பட்ஸ், இயர்போன்கள், யூஎஸ்பி கேபிள்கள் அறிமுகம்!

 எல்லாமே குறைந்த விலை: டெக்னோ இயர்பட்ஸ், இயர்போன்கள், யூஎஸ்பி கேபிள்கள்

டெக்னோ புதிய ஸ்மார்ட்போன் பாகங்களை அறிமுகம் செய்துள்ளது. அது டிடபிள்யூஎஸ் பட்ஸ் 1, ஹாட் பீட்ஸ் ஜே2 மற்றும் பிரைம் பி1 இயர்போன்கள், வேகமாக சார்ஜ் செய்யக் கூடிய மைக்ரோ யூஎஸ்பி கேபிள் எம்11 ஆகிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

டெக்னோ நிறுவனத்தின் தகவலின்படி, இந்த புதிய தயாரிப்பு சாதனங்களை பொருத்தவரையில் வயர்ட் இயர்போன்கள், டேட்டா கேபிள் ஆகியவற்றுக்கு மூன்றுமாத மாற்ரு உத்தரவாதம், டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ்-க்கு ஆறு மாத உத்தரவாதத்தையும் நிறுவனம் வழங்குகிறது. டெக்னோவின் மூன்று சாதனங்களும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிலையங்களிலும் வாங்கலாம்.

டெக்னோ இயர்பட்ஸ் 1 சாதனம் குறித்து பார்க்கையில், இந்த இயர்பட்ஸ் விலை ரூ.1,299 ஆக இருக்கிறது. வயர்லெஸ் பட்ஸ் 1 40 எம்ஏஎச் +2 பேட்டரியை கொண்டிருக்கிறது. இந்த சாதனம் ஒரே சார்ஜிங்கில் 4 மணிநேர மியூசிக் ப்ளேபேக் அம்சத்தை கொண்டிருக்கிறது. 300 எம்ஏஎச் சார்ஜிங் வழக்கத்துடன் 12 மணிநேரத்திற்கு மேலான ஆடியோ பயன் அனுபவத்தை வழங்குகிறது. இது ப்ளூடூத் 5.0 உடன் இயங்குகிறது.

ஸ்மார்ட் டச் சென்சார் டெக்னோ ஸ்மார்ட்போன்களின் அழைப்புகள், இசை, வாய்ஸ் அசிஸ்டென்ட் மற்றும் யூஸர் ஃப்ரண்ட்லி பாப்-அப் இணைப்பு அனுபவத்தை வழங்குகிறது. வாட்டர் மற்றும் வியர்வை ரெசிஸ்டென்ட் அனுபவத்தை வழங்குகிறது. இது மென்மையான சிலிகான் இயர் சாதனங்கள் மற்றும் இயர்(காது) பிடிப்புகளை கொண்டிருக்கிறது. இது மென்மையான அனுபவத்தை வழங்குகிறது.

வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆனது ஒற்றை மற்றும் இரட்டை என இரண்டு முறை பயன்பாடுகளை வழங்குகிறது. இது இரட்டை ஜோடி பயன்பாட்டுக்கான ஸ்விட்ச் பயன்முறையை வழங்குகிறது. போக்குவரத்தை சமயத்தில் பின்னணி இரைச்சலை கேட்க வேண்டிய ஆதரவு இருக்கிறது. அதாவது இந்த ஸ்விட்ச் பயன்பாட்டின் மூலம் ஒருவர் ஒரு இயர்பட்ஸ்-ல் அழைப்புகளை மேற்கொள்ளவும், மற்றொரு இயர்பட்ஸ்-ல் வெளிப்புற இரைச்சலை அணுகவும் உதவுகிறது.

ஹாட் பீட்ஸ் ஜே2 வயர்ட் இயர்போன்கள்

இந்த இயர்போனின் விலை ரூ.349 ஆக இருக்கிறது. இதுமிகவும் மலிவு விலை சாதனமாகும். ஹாட் பீட்ஸ் ஜே2 இயர்போன்கள் தெளிவான ஒலி அனுபவத்துக்கு இரட்டை ஒலி இயக்கி பொருத்தப்பட்டிருக்கிறது. ப்ளே, இடைநிறுத்தம், சத்தம் ஏற்ற இறக்கம் ஆதரவை வழங்குகிறது. உள்ளமைக்கப்பட்ட மைக்ரோபோன் போன்ற செயல்பாடுகளை கொண்டிருக்கிறது. ஹாட் பீட்ஸ் ஜே2 இயர்போன்கள் டிபிஇ த்ரெட் வயர் உடன் பாதுகாக்கப்படுகிறது.

ப்ரைம் பி1 வயர்ட் இயர்போன்கள்

இந்த இயர்போன் விலை மிக மலிவாக இருக்கிறது. இதன் விலை ரூ.225 ஆக உள்ளது. பிரைம் பி1 இயர்போன் பளபளப்பான உலோக வடிவமைப்பு, பாதுகாப்பு டிபிஇ வயர்களை கொண்டிருக்கிறது. ஹேண்ட்ஸ் ஃப்ரீ அழைப்புக்கான மைக்ரோபோன் உள்ளமைவு மற்றும் ப்ளே இடைநிறுத்த ஆதரவை கொண்டுள்ளது. அதோடு அளவை சரிசெய்வதற்கு எளிதாக அணுக மல்டி ஃபங்க்சன் பட்டன் ஆதரவு உள்ளது. இந்த இயர்போன்கள் அட்டகாச ஆடியோ தரத்திற்கு சிறந்த மெகா பேஸ் அனுபவத்தை வழங்குகிறது.

கேபிள் எம்11

கேபிள் எம்11 ஆனது 1 மீட்டர் நீளம் மற்றும் பிவிசி பாதுகாப்பு ஆதரவு இருக்கிறது. இந்த யூஎஸ்பி கேபிள் விலை ஆனது ரூ.125 ஆக இருக்கிறது. இந்த கேபிள் 2ஏ ஃபாஸ்ட் சார்ஜிங், மைக்ரோ யூஎஸ்பி ஆதரவு அதிவேக டேட்டா பரிமாற்றம் ஆகிய அனுபவத்தை வழங்குகிறது.


,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக