
அசுஸ் நிறுவனத்தின் லேப்டாப் மாடல் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக இந்நிறுவனத்தின் லேப்டாப் மாடல்கள் தனித்துவமான அம்சங்களை கொண்டு வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் புதிய TUF Dash F15 கேமிங் லேப்டாப் மாடலை அறிமுகம் செய்துள்ளது அசுஸ் நிறுவனம்
15.6-இன்ச் டிஸ்பிளே
அசுஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளTUF Dash F15 கேமிங் லேப்டாப் மாடல் 15.6-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும்240Hz refresh rate மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
76Wh பேட்டரி
அசுஸ் TUF Dash F15 கேமிங் லேப்டாப் மாடலில் 76Wh பேட்டரி இடம்பெற்றுள்ளது. எனவே 16 மணி நேரத்திற்கும் மேலான பேட்டரி ஆயுளை வழங்குகிறது. பின்பு இந்த லேப்டாப் 100W வரை டைப்-சி அடாப்டர்கள் வசதியுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு வந்த அசுஸ் லேப்டாப் மாடல்களை விட இந்த TUF Dash F15 கேமிங் லேப்டாப் மாடல் 10 சதவீதம் சிறியது. பின்பு மெல்லிய வடிவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய கேமிங் லேப்டாப் மாடல்.
தண்டர்போல்ட் 4, யுஎஸ்பி 3.2 ஜென் 1, எச்டிஎம்ஐ 2.0 போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக், புளூடூத் 5.2, வைஃபை உள்ளிட்ட பல்வேறு இணைப்புஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான லேப்டாப் மாடல்.
அசுஸ் நிறுவனத்தின் இந்த புதிய லேப்டாப் மாடலில் 11 வது ஜெனரல் இன்டெல் கோர் i7-11370H CPU மற்றும் NVIDIA GeForce RTX 3070 அல்லது NVIDIA GeForce RTX 3060 இரண்டு கிராஃபிக் கார்டு விருப்பங்களை பெறமுடியும்.
மேலும் இந்த சாதனத்தில் 32GB of DDR4 ரேம் வசதி மற்றும் 1 டிபி வரை சேமிப்பு வசதி இடம்பெற்றுள்ளது. இந்த TUF Dash F15 கேமிங் லேப்டாப் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
இந்த சாதனத்தின் ஆடியோ பற்றி பேசுகையில், டி.டி.எஸ்: எக்ஸ் அல்ட்ரா தொழில்நுட்பத்துடன் இரட்டை ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது இந்த புதிய லேப்டாப் மாடல். பின்பு ஸ்டீரியோ ஹெட்செட் அல்லது ஸ்பீக்கர்களுக்கு 7.1-சேனல் மெய்நிகர் சரவுண்ட் ஒலியைக் கொண்டுவருகிறது.
Eclipse Grey நிறம் கொண்ட அசுஸ் TUF Dash F15 கேமிங் லேப்டாப் மாடலின் விலை ரூ.1,39,990-ஆக உள்ளது. பின்பு Moonlight White நிறம் கொண்ட அசுஸ் TUF Dash F15 கேமிங் லேப்டாப் மாடலின் விலை ரூ.1,40,990-ஆக உள்ளது.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக