Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 10 மார்ச், 2021

இன்றைய கடி - ரிலாக்ஸ் ப்ளீஸ்...!!

----------------------------------------

இது சிரிப்பதற்கான நேரம்..!!

----------------------------------------

நோயாளி : எல்லா நோயாளிகளிடமும் இனிமையாப் பேசற டாக்டர் என் படுக்கை அருகே வந்ததும் கடுகடுப்பாகி என் மேலே எரிஞ்சு விழறாரே, ஏன்?

நர்ஸ் : நீங்க சர்க்கரை வியாதிக்காரராச்சே. இனிக்க இனிக்கப் பேசினா சுகர் லெவல் கூடிடும்ன்னு பயப்படறார்.

நோயாளி : 😄😄

----------------------------------------

பாலு : மன அழுத்தத்திற்கு மாத்திரை வேணும் சார்...

கடைக்காரர் : சொன்னா கேளுங்க... மன அழுத்தத்திற்கு மாத்திரை வேணும்-னா டாக்டர் சீட் வேணும்... இப்படி கல்யாண சர்டிபிகேட்லாம் காட்டி மாத்திரை கேட்கக்கூடாது...

பாலு : 😖😖

----------------------------------------

இன்றைய கடி...

----------------------------------------

 

தண்ணீருக்கும், பாம்புக்கும் இடையேயுள்ள ஒற்றுமை என்ன?

.

.

.

.

.

இரண்டுக்குமே கால்கள் கிடையாது. ஆனால் இரண்டுமே தரையில் தான் ஓடும்.

 

வாழைப்பழத்தின் விலை கூடுதலாக இருந்தாலும், அதை எப்படி வாங்க வேண்டும்?

.

.

.

.

.

'சீப்"பாகத்தான் வாங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக