
வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து பயனுள்ள அம்சங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு புதிய அம்சங்களும் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் வாட்ஸ்அப் செயலியில் உள்ள சில அம்சங்கள் சிக்னல், டெலிகிராம் போன்ற செயலிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப் நிறுவனம்
குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், வாட்ஸ்அப் தனது தனியுரிமைக் கொள்கையை அறிவித்த உடனே பல்வேறு மக்கள் டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற செயலிகளை பயன்படுத்த துவங்கி விட்டனர். அதிலும் டெலிகிராம் செயலியை இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்டனர். ஆனாலும் வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு புதிய புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது.
அதன்படி வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஆடியோ மெசேஜை FAST FORWARD செய்ய புதிய வசதியை கொண்டுவர உள்ளது.. அதாவது நீண்ட ஆடியோ மெசேஜ்களை கேட்பதை எளிதாக்கும் புதிய அம்சத்தை தான் இந்நிறுவனம் கொண்டுவர உள்ளது.
ஸ்பீடை மாற்ற அனுமதிக்கும்
அண்மையில் வெளிவந்த WABetaInfo தகவலின்படி, வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு புதிய அம்சத்தை சோதிக்கிறது, இது ஐஒஎஸ்-ல் ஆடியோ பேக்கிரவுண்ட் ஸ்பீடை மாற்ற அனுமதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், நீங்கள் ஒரு வீடியோவை பாஸ்ட் பார்வேட் செய்வது போல, ஒரு வாட்ஸ்அப் ஆடியோ மெசேஜை 1.5எக்ஸ் அல்லது 2எக்ஸ் வேகத்தில் பிளே செய்து இயக்க முடியும். மேலும் வாடிக்கையாளர்கள் ஸ்டாண்டர்ட் 1 எக்ஸ் வேகத்திலும் ஆடியோ மெசேஜ்களை கேட்டகாலம் என்று கூறப்பட்டுள்ளது.
FAST FORWARD அம்சம்
அதிலும் உங்களது நண்பர்கள் அல்லது உறவினர்கள் மிகவும் மெதுவாகப் பேசும் வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜை உங்களுக்கு அனுப்பினால், அந்த மெசேஜை நீங்கள் விரைவாகப் புரிந்துகொள்ள இந்த FAST FORWARD அம்சம் அருமையாக உதவும்.
ஆனால் இந்த புதிய வசதி தற்போது பீட்டாவில் இருப்பதாகவும், வாட்ஸ்அப் வெர்ஷன் 2.21.60.11 இந்த அம்சத்துடன் வரும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு WABetaInfo- தளம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு WhatsApp Web Beta எனும் திட்டம் உருவாக்கம் பெறுவதாகவும், இது உங்கள் ஸ்மார்ட்போனை இணையத்துடன் இணைக்காமல் வாட்ஸ்அப் வெப்பை பயன்படுத்த உதவும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐஓஎஸ் 9
அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் ஐஓஎஸ் 9-ல் இயங்கும் சாதனங்களில் தனது சேவையை நிறுத்தப்போவதாக WABetaInfo இன் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஓஎஸ் பழைய இயங்குதளம் பயன்படுத்தும் பயனர்கள் தங்களது சாதனத்தை அப்டேட் செய்ய வேண்டும் அல்லது புதிய சாதனத்திற்கு மாற வேண்டும் என கூறப்படுகிறது. வெளியாகியுள்ள தகவலின்படி 2.21.50 வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் உள்ள iOS 9 சாதனங்கள், வாட்ஸ்அப் பயன்பாட்டை பயன்படுத்த முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.
கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக