ஒன்பிளஸ் நிறுவனம் தனது வரவிருக்கும் ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை இந்த வார இறுதியில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த ஒரு செய்தியே, ஆனால், ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன் வரிசையில் ஒன்பிளஸ் 9, ஒன்பிளஸ் 9 ப்ரோ மற்றும் ஒன்பிளஸ் 9 ஆர் ஆகிய மூன்று மாடல்கள் வரும் மார்ச் 23 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஒன்பிளஸ் 9 ஆர் 5 ஜி ஸ்மார்ட்போன்
இப்போது அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்னதாக, ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஒன்பிளஸ் 9 ஆர் 5 ஜி ஸ்மார்ட்போன் பற்றிய ஒரு புதிய டீசரை வெளியிட்டுள்ளது. இந்த புதிய டீஸர் ஒன்பிளஸ் 9 ஆர் 5 ஜி ஸ்மார்ட்போன் ஒரு கேமிங் ஸ்மார்ட்போனாக அறிமுகம் செய்யப்படலாம் என்பதை இந்த புதிய டீசர் தகவல் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த உறுதிப்படுத்தல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தின் வழியாக வெளியாகியுள்ளது.
கேமிங் ஸ்மார்ட்போன் மாடலா?
டீசர் புகைப்படம் ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போனை கேமிங் ட்ரிக்கர் பேட் உடன் காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது இந்த புதிய ஸ்மார்ட்போன் கேமிங் ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கக்கூடும் என்பதை இது வெளிப்படுத்துகிறது. இது விளையாட்டாளர்களுக்கு மேம்பட்ட அனுபவத்தை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது. டீஸர் படம் ஸ்மார்ட்போனை தெளிவாக வெளிப்படுத்தவில்லை. ஆனால், ஒன்பிளஸ் 9 ஆர் 5 ஜிக்கான பெயருடன் இந்த கேமிங் ட்ரிக்கர்கள் டீஸ் செய்யப்பட்டுள்ளது.
கேமிங் ட்ரிக்கர் உடன் வெளிவருகிறதா ஒன்பிளஸ் 9 ஆர்
உண்மையில் ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போனை இந்த கேமிங் ட்ரிக்கர் உடன் அறிவிக்குமா என்பது இப்போது வரை தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் இது ஒரு அதிகாரப்பூர்வ தகவல் என்பதனால் இதை நம்பலாம் என்கிறது டெக் வட்டாரம். சமீபத்தில், ஒன்பிளஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ், நிறுவனம் ஒன்பிளஸ் 9 ஆர் 5 ஜி போனை 9 தொடரின் கீழ் கொண்டு வருவதாகவும், ஸ்மார்ட்போன் இந்தியாவில் பிரத்தியேகமாக இருக்கும் என்றும் உறுதிப்படுத்தி இருந்தார்.
ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சம்
"ஒன்ப்ளஸ் 9 மற்றும் 9 ப்ரோவுடன், இந்தியாவில் ஒன்பிளஸ் 9 ஆர் அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒன்ப்ளஸ் 9 ஆர் உடன் வெவ்வேறு பயனர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக எங்கள் ஸ்மார்ட்போன் பிளாக்ஷிப் அனுபவத்தை விரிவாக்குவதில் கவனம் செலுத்துகிறோம்", என்றார் பீட். ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம். ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போன் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய 6.5 இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது.
ஸ்டோரேஜ் மற்றும் கேமரா
இது ஸ்னாப்டிராகன் 690 சிப்செட் உடன் இயக்கப்படும் என்றும், இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புடன் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் 9 ஆர் ஸ்மார்ட்போன், 64 மெகாபிக்சல் பிரைமரி சென்சார் கேமராவுடன், 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமராவுடன் டூயல் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. பேட்டரி பற்றி பார்க்கையில், இந்த புதிய ஒன்பிளஸ் 9 ஆர் 5 ஜி ஸ்மார்ட்போன் சாதனம் 5,000 எம்ஏஎச் பேக் செய்யும் பேட்டரி உடன் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக