Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 11 மார்ச், 2021

சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு.. கல்யாண் ஜுவல்லர்ஸ் ஐபிஓ எப்போது?

மூலதன செலவுக்காக நிதி திரட்டல்

இந்தியாவின் முன்னணி நகை கடை உரிமையாளரான கல்யாண் ஜுவல்லர்ஸ், வரும் வாரத்தில் பொது பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.

இந்த பங்கு வெளியீட்டினை மார்ச் 16, 2021 அன்று தொடங்கவுள்ளது. இந்த பங்கு வெளியீட்டில் விலை 86 - 87 ரூபாயாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் 1750 கோடி ரூபாய் நிதியினை திரட்ட திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது 1175 கோடி ரூபாய் மதிப்பில் மட்டுமே திரட்ட திட்டமிட்டுள்ளது.

மூலதன செலவுக்காக நிதி திரட்டல்

இதில் புதிய பங்கு வெளியீடாக 800 கோடி ரூபாயும்க்கும், 375 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் விற்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆக இந்த பங்கு விற்பனையின் மூலம் 125 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2 கோடி மதிப்பிலான பங்குகளை கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் ஒதுக்க திட்டமிட்டுள்ளது.

லாட் சைஸ் என்ன?

இந்த நிதி திரட்டலானது அதன் மூலதன செலவினங்களுக்காக பயன்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 172 பங்குகள் வாங்கலாம். அதற்கும் அதிகமாக வாங்க வேண்டுமெனில் 172ன் மடங்கில் வங்கலாம். உண்மையில் இது சிறு முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பு தான்.

நிறுவனம் பற்றி

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவனம் கடந்த 45 வருடங்களாக சில்லறை நகை வியாபரத்தில் இருந்து வருகின்றது. இந்த நிறுவனம் கடந்த 1993ல் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட நிலையில் திரிச்சூர், கேரளாவில் ஒரே ஒரு ஷோரூம் மட்டும் தொடங்கியது. ஆனால் இன்று அதன் ஷோரூம்கள் 21 மாநிலங்களில் 107 ஷோரூம்கள் உள்ளன. இதே சர்வதேச அளவில் 30 ஷோரூம்கள் உள்ளன.

ஆன்லைனிலும் விற்பனை

இவற்றோடு இந்த நிறுவனம் candere.com. என்ற இணையத்தின் மூலமாகவும் நகை விற்பனையை செய்து வருகின்றது.

அதோடு இன்னும் கூடுதலாக ஷோரூம்களை திறக்க திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த பங்கு வெளியீட்டினை ஆக்ஸிஸ் கேப்பிட்டல், சிட்டி குரூப் குளோபல் மார்கெட்ஸ் இந்தியா, ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ், எஸ்பிஐ கேப்பிட்டல் மார்கெட்ஸ், பிஓபி கேப்பிட்டல் மார்கெட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நிர்வகிக்க உள்ளன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக