வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ. 401 முதல் ரூ. 801 வரை நான்கு புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டங்கள் பயனர்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார், வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர், நைட் டைம் டேட்டா மற்றும் பலவற்றிற்கு மாதாந்திர இலவச அணுகலை வழங்குகிறது. இது பற்றிய கூடுதல் விபரங்களைத் தெளிவாகப் பார்க்கலாம்.
நான்கு புதிய திட்டங்கள்
அறிமுகப்படுத்தப்பட்ட நான்கு புதிய திட்டங்களின் விலை ரூ .401, ரூ .501, ரூ .601 மற்றும் ரூ .801 ஆகும். இந்த திட்டங்கள் அனைத்தும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாக்களுடன் வருகின்றன, ஆனால் இதில் ஒரு சூட்சமம் உள்ளது. வோடபோன் ஐடியா வழங்கும் இந்த டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா ஒரு விஐபி சந்தாவாகும். இது பிரீமியம் சந்தா இல்லை என்பதை மறக்கவேண்டாம், இது விஐபி சந்தா என்பதனால் நீங்கள் விளம்பரங்களைப் பார்க்கவேண்டியிருக்கும்.
ரூ 401 ப்ரீபெய்டு திட்டம்
இந்த திட்டம் உங்களுக்கு வரம்பற்ற அழைப்பு நன்மை, தினமும் 3GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மையை வழங்குகிறது. இத்துடன் உங்களுக்கு இரவு நேர டேட்டா நன்மை கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை எந்த வரம்பும் இல்லாமல் டேட்டாவை பயன்படுத்தலாம். இத்துடன் 16 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கான 1 ஆண்டு விஐபி சந்தாவும் கிடைக்கிறது. வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர், vi மூவிஸ் மற்றும் டிவி சந்தவுடன் இத்திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது
ரூ 501 ப்ரீபெய்டு திட்டம்
இது டேட்டா மட்டும் வழங்கும் ஒரு திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் உங்களுக்கு செல்லுபடியாகும் காலம் வரை 75 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இத்துடன் உங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தா மற்றும் Vi மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகலுக்கான 1 ஆண்டு சந்தாவுடன் வருகிறது. இது 56 நாள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. அன்லிமிடெட் அழைப்பு நன்மை மற்றும் எஸ்எம்எஸ் நன்மை வேண்டாம் என்பவர்களுக்கு இந்த திட்டம் ஏற்றது.
ரூ 601 ப்ரீபெய்ட் திட்டம்
இந்த திட்டம் உங்களுக்கு தினமும் 3 ஜிபி தினசரி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் உங்களுக்கு 56 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது. இந்த காலகட்டத்தில் உங்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மை, வரம்பற்ற அழைப்பு நன்மை, 16 ஜிபி கூடுதல் டேட்டா, 1 ஆண்டு டிஸ்னி + Hotstar விஐபி சந்தா, நைட் டைம் இலவச டேட்டா நன்மை, வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் நன்மை மற்றும் Vi மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகல் ஆகியவற்றை வழங்குகிறது.
ரூ 801 ப்ரீபெய்ட் திட்டம்
இந்த திட்டம் உங்களுக்கு தினமும் 3 ஜிபிடேட்டா நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ், 16 ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கான 1 ஆண்டு விஐபி சந்தா கிடைக்கிறது. கூடுதல் நன்மைகள் மேலே உள்ளதைப் போலவே அடங்கும், வோடபோன் ஐடியா இந்த திட்டங்களுக்கு அதிவேக இரவுநேர டேட்டா நன்மை, வீக்கெண்ட் டேட்டா ரோல் ஓவர் நன்மை மற்றும் Vi மூவிஸ் மற்றும் டிவிக்கான அணுகலை வழங்குகிறது. இந்த திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் வருகிறது.
போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கும் நல்ல செய்தி
Vi நிறுவனம் அதன் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கும் ஒரு நல்ல செய்தியைக் கொண்டுவந்துள்ளது, ஏனெனில் இது தற்போதுள்ள சில போஸ்ட்பெய்ட் திட்டங்களிலும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ. 499, ரூ .699 மற்றும் ரூ .1,099 விலையுள்ள வி தனிநபர் போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கும், ரூ. 649, ரூ .799, ரூ .999 மற்றும் ரூ. 1,348 விலை கொண்ட Vi பேமிலி பேக் திட்டங்களுக்கும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபி சந்தாவை வழங்குகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக