டிக்வாட்ச் ப்ரோ எஸ் வியர்ஓஎஸ், ஸ்னாப்டிராகன் வியர் எஸ்ஓசி, அமோலெட் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல்வேறு அம்சங்களோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டிக்வாட்ச் ப்ரோ எஸ் ஆனது மொபாய் உருவாக்கிய வியர்ஓஎஸ் பயன்பாட்டின் புதிதாகும். இந்த வாட்ச் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்ட டிக்வாட்ச் ப்ரோவின் வாரிசாக கருதப்படுகிறது. வியர் ஓஎஸ் ஸ்மார்ட்வாட்ச் என்எஃப்சி மூலமாக கூகுள் பே போன்ற பல்வேறு அம்சங்கள் கிடைக்கப்பெறுகிறது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒற்றை வண்ண விருப்பத்திலும், ஒற்றை டயல் அளவிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.19,500 என்ற விலை அளவில் இருக்கிறது. இந்தியாவில் டிக்வாட்ச் கிடைக்கும் தன்மை குறித்து இதுவரை தெரியவில்லை.
டிக்வாட்ச் ப்ரோ எஸ் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். இதில் டிக்வாட்ச் ப்ரோ எஸ் 400x400 பிக்சல்கள் தீர்மானம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 1.39 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த டிக்வாட்ச் குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சாதனம் 1ஜிபி ரேம், 4ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது.
இந்த டிக்வாட்ச் கூடுதல் சிறப்பு அமைப்பு குறித்து பார்க்கையில், இந்த டிக்வாட்ச் கூகுள் வியர் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. ப்ளூடூத் 4.2, வைஃபை மற்றும் ஜிபிஎஸ் ஆகிய பயன்பாடுகளுடன் இந்த சாதனம் வருகிறது. அதோடு தனித்துவம் என்று பார்த்தால் இதில், கூகுள் பே பயன்பாடு ஆதரவு இருக்கிறது.
ஆன்போர்ட் சென்சார் அசிலெரோமீட்டர், ஜிரோ, மேக்னடிக் சென்சார், பிபிஜி ஹார்ட் ரேட் கண்காணிப்பு, ஆம்பியன்ட் லைட் சென்சார் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இதில் இருக்கிறது. இந்த டிக்வாட்ச் சாதனத்தில் 415 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் சாதன பயன்முறையானது இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை பேட்டரி ஆயுள் நீடிக்கிறது. மொபாய் தகவல்படி எசென்ஷியல் பயன்முறையில் 30 நாட்கள் வரை பேட்டரி ஆயுள் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்சில் விஓ2 மேக்ஸ் கண்காணிப்பு, டிக் உடற்பயிற்சி 3.0, டிக் ப்ரீத், டிக் ஸ்லீப் 2.0, டிக் ஒலி மற்றும் வாய்ஸ் மெமோ அம்சங்களும் உள்ளன. அமோலெட் டிஸ்ப்ளே உடன் எல்சிடி டிஸ்ப்ளே உடன் இருக்கிறது. பயனர்கள் தங்கள் டிக்வாட்ச் ப்ரோ எஸ் தனிப்பயனாக்க அம்சங்களுடன் வருகிறது.
முதல் டிக்வாட்ச் மொப்வாய் இரட்டை காட்சிகள் போன்ற புதுமையான அம்சங்களுடன் வந்தது. சமீபத்தில் டிக்வாட்ச் ப்ரோ 3, முறையான வியர் ஓஎஸ் ஸ்மார்ட்வாட்ச் உடன் உருவாக்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ.29,999 ஆகிய சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3, ஆப்பிள் வாட்ச் எஸ்இ ஆகியவற்றுடன் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்வாட்ச்சின் முக்கிய சிறப்பம்சமாக
குவால்காம் ஸ்னாப்டிராகன் வியர் 4100 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப் மிக
வேகமான அனுபவத்தை வழங்குகிறது. டிக்வாட்ச் ப்ரோ 3 இரட்டை காட்சி 2.0 தொழில்நுட்பத்தை
வழங்குகிறது. இது 1.4 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே, குறைந்த சக்தி கொண்ட எஃப்எஸ்டிஎன் எல்சிடி
டிஸ்ப்ளே ஆகியவையை கொண்டுள்ளது. சூரிய ஒளியிலும் காட்சியை துள்ளியமாக காண முடிகிறது.
எஃப்எஸ்டிஎன் டிஸ்ப்ளே மிகவும் சிறந்த பயன்பாட்டையும் எல்லா சூழலிலும் கடிகாரத்தை அணுகக்கூடிய
ஆதரவையும் வழங்குகிறது. இதன் அம்சங்கள் அனைத்தும் பயனர்களை ஈர்க்கும் விதமாகவே உள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக