----------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
----------------------------------------------
மனைவி : ஏங்க, என் பிரசவ நேரத்தில் உங்களுக்கு உதவியா இருக்க எங்கம்மாவை வர சொல்லட்டுமா?
கணவன் : வயதான காலத்தில் அவங்களை ஏன் சிரமப்படுத்துற?
மனைவி : அப்போ என்ன பண்ணலாம்?
கணவன் : பேசாம உன் தங்கையை வரவழைச்சிடு!
மனைவி : 😡😡
----------------------------------------------
குட்டிக்கதை...!!
----------------------------------------------
புதுசா வேலைக்கு சேர்ந்த ஒருத்தர் முதல்நாள் கேண்டீனுக்கு போன் பண்ணினாரு.
'ஹலோ.. கேண்டீனா? ஸ்ட்ராங்கா.. ஒரு ஃபில்ட்டர் காஃபி அனுப்புய்யா!"
எதிர்முனையில்.. 'டேய் லூசு.. இப்ப நீ தப்பான நம்பருக்குக் கூப்பிட்டிருக்கடா மடையா. உனக்கு நான் யாருன்னு தெரியுமா?"
'தெரியலையே..."
'நான் இந்தக் கம்பெனியோட எம்.டி.டா அறிவுகெட்டவனே.."
புதியவர் பயந்தாலும், கெத்தா குரலை உயர்த்திச் சொன்னாரு..
'அடேய்.. நான் யாருன்னு தெரியுமா?"
'தெரியாது!"
'அப்பாடா.. தப்பிச்சேன்..!"
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக