-----------------------------------------
சிரிக்க சிரிக்க சிரிப்பு...!!
-----------------------------------------
ரமேஷ் : என்னடா இவனோட இம்சையா போச்சே?
சுரேஷ் : ஏன்டா... என்ன சொல்றான்?
ரமேஷ் : சாமிக்கு மொட்டை அடிக்கிறதா 8 முறை வேண்டிக்கிட்டானாம்.. 8 மொட்டையையும் ஒரே சமயத்தில் அடிச்சிட சொல்லி அடம்புடிக்கிறான்..
சுரேஷ் : 😜😜
-----------------------------------------
மனைவி : என்னை எந்த அளவுக்கு காதலிக்கிறீங்க?
கணவன் : ரொம்ப, சொல்லப்போன ஷாஜகான் மாதிரின்னு வெச்சிக்கோயேன்.
மனைவி : சரி, அப்படீன்னா எனக்காக தாஜ்மஹால் கட்டுவீங்களா?
கணவன் : பிளாட் ரெடியா இருக்கு, நீ தான் லேட் பண்ணிக்கிட்டு இருக்க..
மனைவி : 😣😣
-----------------------------------------
ஓரெழுத்து ஒரு மொழி...!!
-----------------------------------------
அ - எட்டு, அழகு, திருமால், திப்பிலி
ஆ - பசு, ஆன்மா, ஆச்சா மரம், ஞானம், இச்சை, வரையாடு
ஈ - கொடு, பறக்கும் பூச்சி, திருமகள்
உ - சிவன்
ஊ - தசை, இறைச்சி, உணவு, திங்கள்
-----------------------------------------
முட்டைகோஸ் ஜூஸ்...
-----------------------------------------
🍹 முட்டைகோஸ் ஜூஸில் உள்ள சத்துக்கள் சுவாசப்பாதையில் ஏற்படும் மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா பிரச்சனைகளை தடுக்கிறது.
🍹 அல்சரால் பாதிக்கப்பட்டவர்கள் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால், உடலில் அல்சர் ஏற்படுத்திய பாக்டீரியாவை அழித்து, பிரச்சனைகளை விரைவில் குணமாக்கும்.
🍹 இதில் லாக்டிக் அமிலம் இருப்பதால், குடலில் ஏற்படும் நோய் தொற்றுகள் வராமல் தடுக்கும்.
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக