-------------------------------------------------------
சிரிக்கலாம் வாங்க...!!
-------------------------------------------------------
குமார் : இன்னைக்கு நான் ஆபீஸ்ல பட்டினி கிடந்து வேலை செஞ்சேன்.
ராஜு : அவ்வளவு பிசி ஒர்க்கா?
குமார் : இல்ல.. சாப்பாட்டு நேரத்துல என்னை யாரும் எழுப்பிவிடல.
ராஜு : 😂😂
-------------------------------------------------------
ராமு : எதுக்குடா அவன அடிச்ச?
சோமு : ஆறு வருஷத்துக்கு முன்ன என்னை தேவாங்குன்னு சொன்னான்.
ராமு : அதுக்கு இப்போ ஏன் அடிக்கிற?
சோமு : நான் நேத்து தான தேவாங்க பாத்தேன்!
ராமு : 😆😆
-------------------------------------------------------
மாயச்சதுரம்...!!
-------------------------------------------------------
முதல் எழுத்தும், கடைசி எழுத்தும் ஒன்றாக அமைந்த மூன்று சொற்கள் உள்ளன. முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் கண்டுபிடியுங்கள்...!!
_டு__ட__ய_
இங்கு கொடுக்கப்பட்டுள்ள வார்த்தைக்கு முதல் எழுத்தை மாற்றினால் வேறு பொருள் கிடைக்கும். அந்த எழுத்துக்களை கண்டுபிடியுங்கள்...!!
_வரம்_வரம்_வரம்
விடை கீழே...👇👇
-------------------------------------------------------
தமிழ்நாட்டின் ஊர்களும்... அதன் சிறப்புகளும்...!!
-------------------------------------------------------
வால்பாறை - தேநீர்
சிறுமலை - மலைவாழை
உடன்குடி - கருப்பட்டி
ஒட்டன்சத்திரம் - கத்தரிக்காய்
ராமேஸ்வரம் - மாசிக்கருவாடு
கோவில்பட்டி - கடலை மிட்டாய்
-------------------------------------------------------
விடை :
கடுமை கடமை கயமை
தாவரம் விவரம் சவரம்
ரிலாக்ஸ் ப்ளீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக