Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 22 மார்ச், 2021

கரண்டே தேவையில்லை: சோலார் சக்தியில் இயங்கும் UBON ஸ்பீக்கர்.. விலை எவ்வளவு கம்மியா?

பெயர் மட்டும் நீளம் இல்லை, இதன் அம்சமும் பெருசு தான்

UBON நிறுவனம் இன்று தனது வயர்லெஸ் போர்ட்ஃபோலியோவை புதிய தொழில்நுட்பத்துடன் ட்ரூலி வயர்லெஸ் ப்ளூடூத் ஸ்பீக்கர் உடன் மேம்படுத்தியுள்ளது. UBON நிறுவனம் தற்பொழுது சோலார் சக்தியில் இயங்கும் புதிய எஸ்பி - 115 எக்ஸ்- பிளானட் சோலார் பவர்டு ட்ரூ வயர்லெஸ் ஸ்பீக்கர் என்ற சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.

பெயர் மட்டும் நீளம் இல்லை, இதன் அம்சமும் பெருசு தான்

பெயரை பார்க்கவே சற்று நீளமாக இருக்கிறது என்று உங்களுக்கு ஒரு எண்ணம் தோன்றியிருக்கலாம். உங்களுக்குத் தோன்றிய எண்ணம் போல, இதில் உள்ள அம்சங்களின் பட்டியலும் சற்று நீளமானது தான், அது என்ன என்று இந்த பதிவின் மூலம் பார்க்கலாம். கரண்டே இல்லாமல், சார்ஜ் செய்யும் கவலை இல்லாமல் சூரிய ஒளியை பயன்படுத்தி இயங்கும் கூலான ப்ளூடூத் ஸ்பீக்கரை யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள், அதுவும் மலிவு விலையில் கிடைத்தால் சொல்லவா வேண்டும்.

நம்பமுடியாத விலையில் மிரட்டல் தொழில்நுட்பம்

UBON நிறுவனம் அறிமுகம் செய்துள்ள UBON SP - 115 X- பிளானட் சோலார் பவர் வயர்லெஸ் ஸ்பீக்கர் பிளாக், ஸ்கை ப்ளூ, ப்ளூ மற்றும் ரெட் வண்ணங்களில் வருகிறது. இதன் விலை வெறும் ரூ. 1,699 மட்டுமே. இப்போது இந்த சாதனம் அனைத்து முன்னணி சில்லறைக் கடைகள் மற்றும் ஈ-காமர்ஸ் தளங்களிலிருந்தும் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இது வெறும் வயர்லெஸ் ஸ்பீக்கர் மட்டும் தான் என்று தவறாக நினைக்காதீர்கள். இதில் நீங்கள் எண்ணிப்பார்க்காத பல அம்சங்கள் உள்ளது.

யூ.எஸ்.பி சார்ஜிங் உடன் வரும் சாதனம்

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சூரிய சக்தியில் இயங்கும் வயர்லெஸ் ஸ்பீக்கரில் யூ.எஸ்.பி சார்ஜிங், எல்.ஈ.டி ஃப்ளாஷ்லைட், போர்ட்டபிள் ஸ்பீக்கர், FM ரேடியோ, TF கார்டு சப்போர்ட் மற்றும் ஹேண்ட் ஸ்ட்ராப் போன்ற அட்டகாசமான அம்சங்களுடன் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது யூ.எஸ்.பி போர்ட், மைக்ரோ டி.எஃப் / எஸ்டி கார்டு போன்ற பல இணைப்பு விருப்பங்களுடன் வருகிறது. மேலும், உங்கள் பிளேலிஸ் சலிப்படைய செய்தால், ​​நீங்கள் எளிதாக எஃப்எம் மோடுக்கு மாறி உங்களுக்குப் பிடித்த எஃப்எம் நிலையங்களுக்கு டியூன் செய்யலாம்.

மலிவு விலையில் பெஸ்டான சாதனம்

இந்த புதிய ஸ்பீக்கர் வயர்லெஸ் வேர்சின் 5.0 வழியாக சமீபத்திய உள்ளமைக்கப்பட்ட டி.டபிள்யூ.எஸ் அம்சத்துடன் வருகிறது. மேலும், இந்த புளூடூத் வழியாக 10 மீட்டர் இயக்க வரம்பில் நீங்கள் உங்கள் சாதனங்களை இணைக்க முடியும். இந்த ஸ்பீக்கர் 1200 mAh பேட்டரி ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்பீக்கர் 9 மணி நேரம் வரை தொடர்ச்சியான பேட்டரி பேக்அப் சேவையை வழங்குகிறது மற்றும் எஃப்எம் / ரேடியோ, டிஎஃப் கார்டு, எல்இடி டார்ச், யூ.எஸ்.பி போர்ட் ஆகியவற்றை ஆதரிக்கிறது. இது ஸ்பிளாஷ் ப்ரூஃப் மற்றும் டஸ்ட் ப்ரூஃப் உடலுடன் வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக