Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

புதன், 3 மார்ச், 2021

ஆன்லைனில் ஆப்பிள் ஐபோனை ஆர்டர் செய்த இளம்பெண்: கடைசியில் வந்தது இதுதான்.!

 ஆப்பிள் நிறுவனம்

இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன்கள் உட்பட எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்க வேண்டும் என்றாலே பெரும்பாலானோர் நாட்டம் ஆன்லைன் தளங்களை நோக்கித் தான் செல்கிறது. பெரும்பாலான பொருட்கள் இப்போதெல்லாம் ஆன்லைன் மூலமாகவே வாங்குவதிலேயே மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

அனைத்து மக்களிடமும் ஸ்மார்ட்போன்கள் இருப்பதால் வீட்டில் இருந்தபடியே பல்வேறு பொருட்களை வாங்குகின்றனர். அதாவது ஸ்மார்ட்போனில் அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் தளங்கள் மற்றும் செயலிகளை பயன்படுத்தி தான் மக்கள் பொருட்களை வாங்குகின்றனர்.

குறிப்பாக இதுபோன்ற வலைத்தளங்கள்குறிப்பிட்ட சலுகைகள் கொடுப்பதாலும், பின்பு சரியான நேரத்தில் பொருட்கள் வீட்டிற்கு வருவதாலும் மக்கள் அதிகமாக இதை பயன்படுத்துகின்றனர். மேலும் பண்டிகை மற்றும் விழாக்கள் போன்ற சமயங்களில் அதிரடி விலைகுறைப்பு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.

ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்

இந்நிலையில் ஆன்லைன் மூலம் ஐபோன் ஒன்றை ஆர்டர் செய்த இளம்பெண்ணுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெளிவந்த தகவலின்படி சீனா நாட்டை சேர்ந்த லியு (Liu) என்ற இளம்பெண் ஆப்பிள் ஐபோன் இணையத்தளத்தில் ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ் சாதனத்தை ஆர்டர் செய்துள்ளார்.

பின்பு இந்த சாதனத்திற்கான தொகை 1,500 டாலரை (இந்திய மதிப்பில் ரூ.1,10,142) ஆன்லைனில் செலுத்தியுள்ளார். தொகை செலுத்திய சில நாட்களில் லியுக்கு ஐபோன் டெலிவரி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் ஜூஸ்

மிகவும் ஆசையாக ஐபோன் பாக்ஸை பிரித்துள்ளார் லியு. ஆனால் அதற்கு உள்ளே ஆப்பிள் ஜூஸ் இருந்ததைக் கண்டு லியு அதிர்ச்சியில் உறைந்துள்ளார். பின்பு தான் ஏமாற்றப்பட்டது குறித்து வீடியோ எடுத்து சமூக வலைதளமான Weibo-ல் பதிவேற்றியுள்ளார்.

ஆப்பிள் நிறுவனம்

மேலும் சமூக வலைதளத்தில் வந்த செய்தியை பார்த்ததும் ஆப்பிள் நிறுவனம்இந்த விவகாரத்தை விசாரிப்பதாகக் கூறியுள்ளது. இதேபோல் கடந்த 2018-ம் ஆண்டில் இந்தியாவில் ரூ.55,000 மதிப்புள்ள ஐபோன் 8 மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்தவருக்கு, செல்போன் பாக்ஸில் சோப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே ஆன்லைனில் பொருட்களை வாங்கும்போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக நீங்கள் ஆர்டர் செய்த பாக்ஸை பிரிக்கும்போது வீடியோ எடுப்பது மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக