மின்வாகன தயாரிப்பில் பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனம் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.
மின்வாகன பயன்பாட்டை உலக நாடுகள் பல ஊக்குவிக்க தொடங்கியுள்ளன. சுற்றுச்சூழல் சீர்கேட்டக் கருத்தில் கொண்டு மக்களை எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தியாவில்கூட மின்வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ஃபேம்2 திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இதன்மூலம் மின் வாகனத்திற்கு மானியம் மற்றும் பல்வேறு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. உலக நாடுகள் பலவேற்றில் இதுபோன்ற நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனால், பெரும்பாலான வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் கவனத்தை எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பின் பக்கம் திருப்ப தொடங்கியுள்ளன.
இந்நிலையில், சில செல்போன் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களின் கவனத்தை மின் வாகன தயாரிப்பின் பக்கம் திருப்பத் தொடங்கியிருப்பதை நம்மால் உணர முடிகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் அண்மையில் லெனோவோ நிறுவனம் அதன் ஸ்கேட்டர் ரக மின்சார ஸ்கூட்டரை வெளியீடு செய்தது.
முன்னதாக ஆப்பிள், ஃபாக்ஸ்கோன் மற்றும் ஹூவாய் ஆகிய நிறுவனங்களும் மின்வாகனத்தில் களமிறங்கியிருப்பதாக தகவல் வெளியிட்டன. இதனைத் தொடர்ந்து, தற்போது உலக புகழ்பெற்ற செல்போன் தயாரிப்பு நிறுழனமான ஜியோமி-யும் மின் வாகன தயாரிப்பில் களமிறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மை சில காலங்களாக மிக சிறியளவில் மின் வாகனங்களை அறிமுகம் செய்து வந்த இந்நிறுவனம், தற்போது முழு வீச்சில் மின் வாகன தயாரிப்பில் ஈடுபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக செல்போன் தயாரிப்பு நிறுவனம் கிரேட் வால் மோட்டார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகன உற்பத்தி ஆலையைப் பயன்படுத்த இருக்கின்றது.
இங்கு வைத்தே தனது சொந்த பிராண்ட் பெயரில் மின் வாகனங்களை நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டிருக்கின்றது. ஜியோமி உலகின் மிகப்பெரிய செல்போன் தயாரிப்பு நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் செல்போன்களைப் போலவே மிக முழுமையாக மின் வாகன தயாரிப்பிலும் களமிறங்க இருக்கின்றது. இந்த தகவல் அதன் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆவலைத் தூண்டியிருக்கின்றது.
இந்நிறுவனம், மிக குறைந்த விலையில் அதிக சிறப்பு வசதிகளைக் கொண்ட செல்போன்களை விற்பனைக்குக் களமிறக்கி வருகின்றது. ஆகையால், இதன் மின் வாகனமும் குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் காரணத்தினாலேயே ஜியோமியின் மின் வாகன உற்பத்தி நடவடிக்கை பலரின் கவனத்தை ஈர்க்க தொடங்கியுள்ளது.
இந்நிறுவனம் அதன் முதல் மின் வாகனத்தை 2023ம் ஆண்டில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டிருக்கின்றது. பல்வேறு சிறப்பு தொழில்நுட்ப வசதிகளை இதில் களமிறக்க இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிக பிரமாண்டமாக வாகன உற்பத்தி தொடங்க இருக்கின்ற காரணத்தினாலேயே கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி ஆலையை இந்நிறுவனம் தன்னுடைய வாகன உற்பத்தி பயன்பாட்டிற்காக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
மின் வாகன சந்தையில் இந்நிறுவனத்தின் வருகை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிறுவனத்தின் செல்போன் வருகையால் பல முன்னணி பிராண்டுகள்கூட தொடர்ந்து ஆதிக்கத்தைச் செலுத்த முடியாமல் திணறி வருகின்றன. இதே நிலையை பிற மின் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் குறைந்த விலை மின்சார வாகனங்களால் ஜியோமி ஏற்படுத்தலாம் என யூகிக்கப்படுகின்றது.
ஜியோமி நிறுவனம் செல்போன் மட்டுமின்றி ஸ்மார்ட்வாட்ச், ஏர் ப்யூரிஃபையர், எல்இடி டிவி, புரஜெக்டர், வேக்யூம் க்ளீனர், ப்ளூடூத் ஸ்பீக்கர், இன்டர்நெட் ரவுட்டர், பேக்பேக்குகள், இயர்போன், இயர்பட்ஸ், எல்இடி மின் விளக்கு, லக்கேஜ் சூட்கேஸ், செக்யூரிட்டி கேமிரா என எக்கசக்க வீட்டு தேவைப் பொருட்களை விற்பனைக்கு வழங்கி வருகின்றது

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக