
வோடபோன் ஐடியா நிறுவனம் தொடர்ந்து புதிய சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிவித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவந்த weekend rollover data சலுகை ஆனது வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும்.
வோடபோன் ஐடியா நிறுவனம்
இந்நிலையில் வோடபோன் ஐடியா நிறுவனம் சத்தமில்லாமல் தனது வாடிக்கையாளர்களுக்கு கேஷ்பேக் சலுகையை வழங்கியுள்ளது. அதாவது ரூ. 199 க்கு மேல் உள்ள அனைத்து வரம்பற்ற ரீசார்ஜ்களிலும் உறுதிப்படுத்தப்பட்ட கேஷ்பேக்கை வழங்குகிறது இந்நிறுவனம். கண்டிப்பாக இந்த கேஷ்பேக் சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 31-ம் தேதி வரை இருக்கும்
அதேபோல் வோடபோன் ஐடியா நிறுவனம் அறிவித்துள்ள இந்த கேஷ்பேக் சலுகை வரும் மார்ச் 31-ம் தேதி வரை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது மார்ச் 31-க்குள் பயனர்கள் ரீசார்ஜ் செய்தால் இந்த கேஷ்பேக் சலுகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சலுகைக்கு March Flash Sale என்று பெயரிட்டுள்ளது அந்நிறுவனம்.
ரூ.20 க்கான கேஷ்பேக்
வோடபோன் ஐடியா பயனர்கள் ரூ.249, ரூ.299, ரூ.301,மற்றும் ரூ.405 திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால் ரூ.20 க்கான கேஷ்பேக் கூப்பன்களை பெறமுடியும். அதாவது இந்த திட்டங்கள் 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் என்று கூறப்படுகிறது.
ரூ.40-க்கான கேஷ்பேக்
மேலும் ரூ.399, ரூ.449, ரூ.558, ரூ.595, ரூ.601 திட்டங்களில் ரீசார்ஜ் செய்தால் ரூ.40-க்கான கேஷ்பேக் கூப்பன்களை வாடிக்கையாளர்கள் பெறமுடியும். குறிப்பாக இந்த திட்டங்கள் 56 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் ஆகும்.
ரூ.60 க்கான கேஷ்பேக்
கடைசியாக ரூ.601-க்கு மேல் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூ.60 க்கான கேஷ்பேக் கூப்பன்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது ரூ.2,595 வரை இருக்கும் திட்டங்களை தேர்வு செய்தால் இந்த ரூ.60 க்கான கேஷ்பேக் கூப்பன்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த திட்டங்கள் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் ஆகும்.
குறிப்பாக இந்த கேஷ்பேக் சலுகைகளை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறைகளில் பெறமுடியும். விரைவில் இந்நிறுவனம் இதேபோன்ற பல்வேறு சிறப்பான சலுகைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்குமுன்பு வெளிவந்த தகவலின்படி, வோடபோன் ஐடியா (விஐ)-ன் ரூ.1197 ப்ரீபெய்ட் திட்டம் பயனர்களுக்கு ஏணைய ஸ்ட்ரீமிங் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஜீ5 ப்ரீமியம் சலுகைகள் நன்மைகளும் கிடைக்கிறது. அதேபோல் ரூ.1197 திட்டத்தில் பயனர்களுக்கு வரம்பற்ற குரலழைப்பு, 1.5ஜிபி டேட்டா, தினசரி 100 எஸ்எம்எஸ்கள் ஆகியவற்றை 180 நாட்கள் கால அவகாசத்தோடு வழங்குகிறது. திட்டத்தின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், ரூ.1197 திட்டத்தில் அதிவேக இரவு நேர வரம்பற்ற டேட்டா, வீக் எண்ட் ரோல் ஓவர் டேட்டா, விஐ திரைப்படங்கள் மற்றும் டிவி அணுகல் பயன்பாடுகளை வழங்குகிறது. ரூ.1197 திட்டத்தில் ஜீ5 ப்ரீமியம் சந்தா வழங்கப்படுகிறது. ஜீ5 ப்ரீமியம் நேரடி அணுகல் குறித்து பார்க்கையில் வருடத்திற்கு ரூ.999 ஆகவும் மாதத்திற்கு ரூ.99 ஆகவும் இருக்கிறது..

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக