Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 9 மார்ச், 2021

பிறந்தவீட்டில் இருந்து வழி அனுப்பும்போது அழுதழுது இறந்த மணப்பெண்

 Cardiac Arrest: பிறந்தவீட்டில் இருந்து வழி அனுப்பும்போது அழுதழுது இறந்த மணப்பெண்

திருமணம் முடிந்து பெண்ணை அழைத்துச் செல்லும்போது, அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் சோர்வான மணமகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்தார்.  

உணர்ச்சி ரீதியாக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் காரணமாக மாரடைப்பு ஏற்படக்கூடும். இது ரத்தத்தை பம்ப் செய்யும் இதயத்தின் திறனை முடக்கும். மகிழ்ச்சியான திருமண வீட்டின் குதூகலம் சோகமாக மாறிய நிகழ்வு ஒடிசாவில் நிகழ்ந்தது. 

ஒடிசாவின் சோனேபூர் மாவட்டத்தை சேர்ந்த மணமகள் குப்தேஸ்வரி சாஹூ அக்கா ரோஸி (Gupteswari Sahoo aka Rosy) பெண் அழைப்பு சடங்கின்போது, குடும்பத்தை விட்டு பிரியமுடியாமல் அழுதிருக்கிறார். ஒரு கட்டத்தில் விக்கி விக்கி அழுத அவர் திடீரென்று மயக்கமடைந்துவிட்டார்.

வியாழக்கிழமையன்று தான் ரோஸிக்கு, போலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்த பிசிகேசன் பிரதனுடன் திருமணம் முடிந்தது.. புதிதாக திருமணமான மணப்பெண், மாமியார் வீட்டிக்கு கிளம்பியபோது மனம் தாங்காமல் அழுதார்.

இதில் சோகம் என்னவென்றால், சில மாதங்களுக்கு முன்புதான் ரோஸியின் தந்தை காலமானார். அதிலிருந்தே மணமகள் ரோஸி துக்கத்தில் இருந்ததாக, திருமணத்திற்கு வந்த ஒரு விருந்தினர் கூறினார். 

மணமகள் ரோஸி, மயக்கமடைந்தவுடன், கூடியிருந்த உற்றார் உறவினர்கள் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றார்கள். ஆனால், ரோஸிக்கு மீண்டும் சுயநினைவு வரவேயில்லை.

உடனே ரோஸி துங்குரிபள்ளு சி.எச்.சி (Dunguripallu CHC emergency) மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மணமகள் ரோஸி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறப்புக்கான காரணம் இதய செயலிழப்பு என அடையாளம் காணப்பட்டது.

ரோஸி ஒரு இளம் பெண், ஆரோக்கியமான பெண் என்பதால், Binika காவல்நிலைய போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். உணர்ச்சி ரீதியாக மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளின் காரணமாக மாரடைப்பு ஏற்படக்கூடும் என்று மருத்துவர் கூறினார்.

தற்போது, ரோசியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்குப் பிறகு தான் மணமகளின் மரணத்திற்கான முடிவை அறுதியிட்டு சொல்லமுடியும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக